உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க., அரசின் அதிகாரப் போக்கு நியாயமற்றது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், தமிழக பா.ஜ., சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க அரசின் அதிகாரப் போக்கு நியாயமல்ல.திமுக-வினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்கும் திமுக அரசு, பிரதமர் மோடி நாட்டு மக்களோடு கலந்துரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு இத்தனைக் கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல..அதுவும் சுமார் 1000 பொதுமக்களுக்கு அறுசுவை விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழக பா.ஜ., சார்பில் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகும் இறுதி தருணத்தில் அனுமதியில்லை எனக் கூறி, எல்.இ.டி திரை, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து நிகழ்ச்சியை வேறொரு புதிய இடத்திற்கு மாற்றியது தி.மு.க அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கமேயாகும்.இருப்பினும் தி.மு.க அரசு குறிப்பிட்டிருந்த அந்த புதிய இடத்தில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்படும் வரை ஒலிபெருக்கி மற்றும் கைப்பேசிகள் உதவியுடன் மக்களோடு மக்களாக அமர்ந்து பிரதமர் அவர்களின் “மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K Ganesan Ganesan
ஏப் 28, 2025 00:31

What is use of the broad? How many people got benefited. Its sheer waste


Barakat Ali
ஏப் 27, 2025 20:48

எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் மனதின் குரல் கேட்டாங்கன்னா மனசு மாறிடுவாங்க .... அதனால அந்த ப்ரொக்ராமே எங்களுக்குப்புடிக்காது .....


M Ramachandran
ஏப் 27, 2025 19:33

ஓ அதனால் தான் குரல் நெறிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களோ.


SK
ஏப் 27, 2025 17:55

அணைய போகும் விளக்கு இந்த விடியா ஆட்சி


bogu
ஏப் 27, 2025 17:28

உங்க அப்பா மட்டும் தான் உண்மை பேசுவார்


Uuu
ஏப் 27, 2025 16:53

விக்கு கழற போகுது


Sundar R
ஏப் 27, 2025 16:50

ஒரு கட்சி தேர்தலில் தனியாக நின்றால் தான் அதன் யோக்கியதை மக்களுக்குத் தெரியும்.திமுக 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட தனியாக நின்றதில்லை. எதிர்கட்சியினர் தங்கள் கால்களில் பாதணிகளை போடுவதற்கு கூட திமுகவினர் அனுமதி மறுக்கிறார்களா? என்பதை எதிர்கட்சியினரைத் தான் கேட்க வேண்டும். நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழகத்தில் திமுக தனியாக தேர்தலில் நின்றால், ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்காது என்பது தான் அது.


பா மாதவன்
ஏப் 27, 2025 16:12

உண்மையில் சந்தேகமே இல்லாமல் இது ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவது போல் உள்ளது. ஆளுக்கு தகுந்தாற்போல் சட்டத்தை கையில் எடுப்பது என்பது தவறான செய்கையாகும். "ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் காலம்" வெகு விரைவில் இல்லை.


sridhar
ஏப் 27, 2025 17:07

2026ல் கட்டாயம் வரும். ஆனால் அப்போது ஆட்சியில் உள்ளவர்கள் இதே கடுமையை கையில் எடுத்து திமுகவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். செய்வார்களா ?


TRE
ஏப் 27, 2025 16:03

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நாலு கோடி நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு மோடி எப்படியும் போய்த்தான் பேசப்போரார் இதில் தமிழக அரசு அனுமதி கொடுத்தால் என்ன கொடுக்கலேன்னா என்ன தமிழக மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்


N Sasikumar Yadhav
ஏப் 27, 2025 17:00

கோபாலபுர கொத்தடிமையான உம்மிடம் நேர்மை இருக்க வாய்ப்பில்லை


V Venkatachalam
ஏப் 27, 2025 17:00

க.உ.பீஸ் ஒண்ண நிரந்தரமா மறந்துடறானுங்க. 30000 கோடி அடித்த கேடிங்கள பத்தி பேச மாட்டானுங்க. வெட்கமே இல்லாமல் யோக்கியனுங்க மாதிரி பேசுவானுங்க இந்த மானங்கெட்டவனுங்க.


ஆதிநாராயணன்
ஏப் 27, 2025 15:35

மத்தியில் உங்களோட அரசு இருந்தும் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இதை என்ன சொல்வது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை