உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசு: இ.பி.எஸ்., சாடல்

விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசு: இ.பி.எஸ்., சாடல்

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என அதிமுக பொதுச்செயாலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இ.பி.எஸ்., பேசியதாவது: 3 ஆண்டுகளாக சிறுபான்மையினர்கள் கோரிக்கைகள் குறித்து பேசாதது ஏன்?. சிறுபான்மை மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும். திமுக சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சியில் பேச்சு மட்டும்தான் உள்ளது. செயலில் எதுவும் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dbdjakwe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை பாதுகாக்க முடியும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி