உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்

13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழக வரலாற்றில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி படுதோல்வி அடைந்த அரசு திமுக அரசு தான்,'' என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=94re18m9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரியும் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.அதேபோல், சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது திமுக அரசு மீண்டும், மீண்டும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் குறித்து ஆயிரம் முறை விளக்கியிருக்கிறேன். அவர்களி்ன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஏராளமான முறை வலியுறுத்தியுள்ளேன். இடைநிலை ஆசிரியர்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டில் இரண்டாம் நாளாக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 150 நாள்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு துப்பில்லாத திமுக அரசு அடக்குமுறைகளையே பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறது. திமுகவினரிடையே ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரம் முறை ஸ்டாலின் கூறியிருப்பார். ஆனால், சென்னை, மதுரை மாநகராட்சி உள்பட திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல்கள் தலை விரித்தாடுகின்றன. கனிமக் கொள்ளை ஊழல், அதிகாரிகள் நியமன ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல், கட்டட அனுமதி ஊழல், போக்குவரத்து ஒப்பந்த ஊழல், குப்பை அள்ளும் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் என கிட்டத்தட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சில ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறையே ஆதாரங்களை அனுப்பியுள்ளது. அவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பதற்கு திறனும், துணிச்சலும் இல்லாத முதல்வர் ஸ்டாலின், எந்த பலமும் இல்லாத அடித்தட்டு மக்களான தூய்மைப் பணியாளர்களிடமும், இடைநிலை ஆசிரியர்களிடமும் மட்டுமே தமது வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது சர்வாதிகாரம் நீதிக்கு எதிராக மட்டும் தான் பாயும் போலத் தெரிகிறது. தமிழக வரலாற்றில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி படுதோல்வி அடைந்த அரசு திமுக அரசு தான். ஊழல்வாதிகளை உலவ விட்டு, அடித்தட்டு மக்களுக்கு எதிராக மட்டும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி இந்த முறை மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி. இவ்வாறு அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T.sthivinayagam
டிச 27, 2025 20:07

அன்புமணி அவர்கள் கவலை பட வேண்டாம் மீதம் உள்ள வாக்குறுதிகளை 2.0 ல் நிறைவேற்றுவார்கள்.என்று மக்கள் நம்புகின்றனர்.


ஆரூர் ரங்
டிச 27, 2025 22:32

மிகப் பழைய கூவம் மணக்கும், (வீராணம்?) குடும்பத்துக்கு 2 ஏக்கர், மது ஆலைகள் மூடல். இதெல்லாம் இன்பா காலத்தில் கூட நடக்கப்போவதில்லை என விஷயமறிந்த மக்கள் கூறுகின்றனர்.


Tamil Inban
டிச 27, 2025 18:53

புலவரே அந்த 13 % என்ன என்னன்னு சொல்லுங்க


அரவழகன்
டிச 27, 2025 18:40

இப்படி பேசினால் நாங்க வாக்குறுதி தரவில்லை என சொன்னாலும் சொல்வார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை