உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: ‛‛ தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக நிர்வாக தோல்வி அடைந்துவிட்டது '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று சட்டசபை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்! இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சிவன்
ஜூன் 20, 2024 11:40

பத்துலட்சம் போறாது. அம்பது லட்சம் வாங்கிக்.குடுங்க.


mindum vasantham
ஜூன் 20, 2024 10:31

திமுக பி டீம் எடப்பாடி நீக்கப்பட்டு நல்ல தலைவர் வந்து பிஜேபி யுடன் கூட்டணி வைய்யுங்கள் ஆந்திராவில் சந்திரா பாபு நாயுடு ஜெயித்தது போல் ஜெயிக்கும் அதிமுக


பச்சையப்பன் கோபால்புரம்
ஜூன் 20, 2024 10:16

ஆளைப்பாரு! 10 தேர்தல்ல தோத்துட்டு தளபதி தோத்துட்டாருன்னு வெக்கமில்லாம அறிக்கை வேறே!!


vijay
ஜூன் 20, 2024 11:27

அதெல்லாம் இருக்கட்டும். கள்ளச்சாராய சாவுக்கள் பற்றி உங்களது கருத்து என்ன? போனமுறை பத்து லட்சம் கொடுத்தது மாதிரி இப்போதும் கொடுப்பார்களா?, சொல்லுங்க


Nallavan
ஜூன் 20, 2024 10:14

டாஸ்மார் சென்று குடிக்க வக்கில்லாத குடிகர்களின் பரிதாப நிலை, நிலை உணர்ந்து அரசு அவர்களின் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு உதவி செய்ய பணம் தர கூடாது முன்வரவேண்டும்


rao
ஜூன் 20, 2024 10:02

People of TASMAC NADU are brain drain and their only goal is any party which offers liquor briyani and cash during elections are voted back to power and it emboldens the party cadres to take up unlawful activities in their hands.


மோகனசுந்தரம்
ஜூன் 20, 2024 09:59

எந்த இறைவனை பிரார்த்திக்கிறீர்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 09:28

பல்லு படாத கண்டனம்?


Srprd
ஜூன் 20, 2024 09:23

இது தான் முதலில் இருந்தே தெரியுமே : முதல்வராக இவர் சரியாக எதையாவது செய்தாரா ?


Sampath Kumar
ஜூன் 20, 2024 09:15

உங்க அரசு நிர்வாக வெற்றி பெற்று இருந்தால் நீங்களும் ஜெயிச்சு இருக்கலாமே ஏன் தோத்து போனீங்க அப்பு போங்க போய் யோசிங்க


Srprd
ஜூன் 20, 2024 09:21

இவர் ஏன் தோற்றார் என்றால், திமுகவுடன் ரகசிய உடன்பாடு வைத்ததாகச் சொல்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 09:14

திராவிஷப் பங்காளிகளின் போலிச் சண்டை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி