உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தொடர் வெற்றி பெற்றதில்லை: நயினார் நாகேந்திரன்

தி.மு.க., தொடர் வெற்றி பெற்றதில்லை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : ''தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது, '' என்று, பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன். 18,200 பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். 15 சதவீதம், போக்சோ குற்றங்கள். 50 சதவீதம், 631 கொலை நடந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார். ஆனால் முதல்வருக்கு இருக்கும் ஒரே நோக்கம். தனது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அதற்காக கூட்டணியை எப்படி தக்க வைத்து கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். உள்ளாட்சி துறையில், 888 கோடி ரூபாய் பணி நியமன ஊழல் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லாரி கொள்முதலில், 130 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. குறுவை நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் இல்லை. மத்திய அரசின் ஆறு கொள்முதல் நிலையங்களும், தனியார் கொள்முதல் நிலையங்களும் தான் உள்ளன. தி.மு.க., அரசுக்கு கவுன்ட்டவுன் ஸ்டார்ட் ஆகி உள்ளது.கடந்த, 1954 முதல் காங்., ஆட்சியில் ஒன்பது முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி செய்யப்பட்டுள்ளது. இப்பணி தமிழக அரசின் அதிகாரிகளை கொண்டுதான் செய்யப்படுகிறது. தமிழக அரசின் தலைமை செயலர், வருவாய் துறையினர், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மீதே முதல்வருக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார். இதுகுறித்து முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருவதால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு, 5,000 ரூபாய் நிச்சயம் கொடுப்பார்கள். இதற்கான கோப்பு தயாராகி வருகிறது. கடந்த, 2001ல் கருணாநிதி பெரிய கூட்டணியை அமைத்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதாதான் வெற்றி பெற்றார். தமிழகத்தில் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது. இதனால் தி.மு.க., தில்லுமுல்லு செய்ய தயாராகி வருகிறது. நிறைய புதிய வாக்காளர்களை சேர்த்திருக்கின்றனர். அவற்றை சரிபார்த்து நீக்க முற்படும்போது அவர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
நவ 04, 2025 14:22

புள்ளிவிவரத்தை நம்பி பொழப்பை ஓட்டாதீங்க.


Venkatesh
நவ 04, 2025 11:53

இந்துக்களுக்கு அறிவு வர வேண்டும்.


Indian
நவ 04, 2025 09:39

டெபாசிட் வாங்க முடியாத கட்சி பேசுது ??


Mario
நவ 04, 2025 09:03

பிஜேபி தமிழ்நாட்டில் வெற்றியே பெற்றதில்லை


ஆதிநாராயணன்
நவ 04, 2025 08:47

இந்த ஜோசியம் சொல்கிற வேலையை விட்டு விட்டு தேர்தலில் வெற்றிக்கான வழிகளை துரிதப்படுத்துங்கள் இல்லையென்றால் அசுர பலத்துடன் உள்ள தி.மு.க கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது


பிரேம்ஜி
நவ 04, 2025 07:53

பாஜாக தமிழ்நாட்டில் ஒருபோதும் வெல்லப்போவதும் இல்லை! இவர்கள் கூட்டணி திமுக அமோக வெற்றி பெற அயராமல் உழைக்கிறது!


திகழ் ஓவியன்
நவ 04, 2025 07:43

இதை மட்டுமே நம்பி அமைதியாக இருந்துடாதீங்க நயினார்...அப்புறம் அடுத்த முறையும் ஜெயிச்சிட போறாங்க...எனவே தேர்தல் வியூகங்களை இன்னும் சிறப்பாக நடைமுறைப் படுத்துங்க...பிளீஸ்...விட்டுறாதீங்க அண்ணே...


Vasan
நவ 04, 2025 04:34

விஜய்க்கு பிஜேபி கொள்கை எதிரி. திமுக தொடர் வெற்றி பெறாமல் இருக்க வேண்டுமென்றால், பிஜேபி 2026 தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருக்கவேண்டும். அப்போது தான் விஜய்+அதிமுக கூட்டணி சாத்தியமாகும், திமுக எதிர் வாக்குகளை சிதறாமல் பெற முடியும். நைனார் அவர்கள் இதை மோடி மற்றும் அமிட்ஷாவிடம் எடுத்துக்கூற வேண்டும்.


Palanisamy Sekar
நவ 04, 2025 05:51

எதற்கும் உங்களது இந்த அளவுக்கு சிந்திக்கவைத்த அரசியல் அறிவாற்றல் மிக்க மூளையை இன்ஷூர் செய்துவைத்துக்கொள்ளுங்கள். இப்படியும் அரசியலில் சிந்திக்க திருமாவளவனால் கூட முடியாது போங்க.


Kasimani Baskaran
நவ 04, 2025 04:08

அதனால்தான் ஆத்தா தீம்க்கா தலைமையை எசப்பாடி மட்டுமே அலங்கரிக்கும் அளவில் வைத்திருக்கிறார்கள். இந்த முறை ஜெயிக்கவேண்டும் என்று ஆத்தா தீமக்காவினரே கூட நினைக்கவில்லை.


Ganesh Kumar
நவ 04, 2025 01:29

தி.மு.க தொடர் வெற்றி பெற்றதில்லை என்பது உண்மைதான் அதை பொய்யாக்கிவிடாதீர்கள் நயினார் அவர்களே - உங்களுடைய மெத்தான போக்கினால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை