உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி

கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி

சென்னை: ''கச்சத்தீவு தீர்மானம் என்பது நாடகம், மீனவர்களுக்கு தி.மு.க., துரோகம் செய்கிறது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hc7vtu7z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரத்தில் முழுமையாக பேச அனுமதிக்கவில்லை. தேர்தலை நோக்கமாக கொண்டு தான் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தீர்கள்; அப்போது ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை. கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. வி.பி.சிங், தேவ கவுடா, வாஜ்பாய், மன்மோகன் உள்ளிட்டோர் பிரதமராக இருந்த போது, தி.மு.க., மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது. அப்போது ஏன் இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை? தேர்தலையொட்டி தீர்மானத்தைக் கொண்டு வந்து மீனவர்களை ஏமாற்ற நாடகம் போடுகின்றனர்.தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 39 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு பார்லி.,யில் இது தொடர்பாக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இவர்கள் எப்படி மீனவர்கள் மீது அக்கரை கொண்ட கட்சியாக இருக்க முடியும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NAGARAJAN
ஏப் 03, 2025 12:05

அதிமுகவில் இருந்து நீங்கள் என்ன கிழித்தீர்கள்


K.Ramakrishnan
ஏப் 02, 2025 22:32

2014ல் நீங்களும் ௩௯ பேர் இருந்தீர்கள். அப்போது கச்சத்தீவை மீட்க என்ன செய்தீர்களோ...அதையே தான் இவர்களும் செய்கின்றனர். நாடாளுமன்ற அலுவல்களை டி.வி.யில் காட்டும்போது தமிழக எம்.பி.க்களின் இருக்கைகள் எல்லாம் பெரும்பாலும் காலியாகத்தான் கிடக்கின்றன.


K.Ramakrishnan
ஏப் 02, 2025 22:24

சட்டசபையில் மக்கள் பிரச்னைகள் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ... திமுகவும், அதிமுகவும் நீங்கள் ஏன் செய்யவில்லை... என்றே மாறி மாறி கேட்டு, விதண்டாவாதம் செய்கின்றனர். துறை மானியக் கோரிக்கை மீது யாரும் பேசுவதில்லை. அதில் ஒரு குற்றச்சாட்டு. அதற்கு மந்திரிகள் பதிலடி. இப்படித்தான் மக்களின் வரிப்பணம் சட்டசபை கூட்டம் என்ற பெயரில் வீணடிக்கப்படுகிறது.


M Ramachandran
ஏப் 02, 2025 15:11

39 MP க்கள் அனுப்பியதென அவர்கள் பாராளுமன்ற கேன்டீன் பஜ்ஜ போண்டா ருசி பார்த்து பரவச மடைய. அதை அவர்கள் ஒழுங்காகத்தானே செய்ய்கிறார்கள். ஏதவது பாராளுமன்றத்தில் கூச்சல் கேட்டால் தூக்கத்திலிருந்து எழுந்து ஒலிக்க கோஷம் போடுவார்கள்


M Ramachandran
ஏப் 02, 2025 15:06

பழனி இப்படி பேசும் நீங்க கள்ளத்தனம் பாட்டை ஏன் எழுப்பவில்லை. இருவர் ஒப்பந்தப்படி உங்களையெல்லாம் கைது செய்யமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை