உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசின் செயல்பாடு தெரிந்தாலும் திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை, எழும்பூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அம்பேத்கருக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை. அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. தூய்மை பணியாளர் என கூறுவதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என கூறலாம். தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்பதே சரி. மருத்துவ காப்பீடு அட்டை கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

நற்பெயர்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். தூய்மைப் பணிகள் இயந்திர மயமாக்கப்பட்டு உள்ளன. ஆதி திராவிடர் மக்களுக்கான திட்டங்கள் எனது ஆட்சியைப் போன்று எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படவில்லை. நல வாரியத்தில் பதிவு செய்த தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதிகாரிகள், போலீசார், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் அரசுக்கு நற்பெயர் கிடைக்கிறது.

களங்கம்

பட்டியலின மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அரசின் செயல்பாடு தெரிந்தாலும் திட்டமிட்டு தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மத வெறி, சாதி வெறி சக்திகளின் எண்ணம் இந்த மண்ணில் நான் இருக்கும் வரை நிறைவேறாது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

சுலைமான்
டிச 07, 2024 10:07

யோக்கியன் வர்றான்! சொம்ப தூக்கி உள்ள வை!!


Jaganathan R
டிச 07, 2024 09:57

எல்லா நேரம்


Bhaskaran
டிச 07, 2024 09:13

குடிநீர் தொட்டியில் மலம்கலந்ததை இன்னும்கண்டுபிடிக்கவில்லை பெரிய சமூக நீதி


ராமகிருஷ்ணன்
டிச 07, 2024 02:33

ஆனாலும் நீங்க ரொம்ப யோக்கியமா, திமுக ஆட்சியின் புகழ் அமெரிக்க ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் நாறிக்கொண்டு இருக்கு.


Rajasekar Jayaraman
டிச 06, 2024 22:50

அதனால்தான் பிளாஸ்டிக் நாற்காலி தருவது.


இராம தாசன்
டிச 06, 2024 21:07

வேறு ஏதாவது முயற்சி செய்யுங்க முதல்வரே - நீங்க தானே சொன்னீங்க தி மு க புடம் போட்ட தங்கம் என்று அப்புறம் எப்படி களங்கம் ஏற்படுத்த முடியும்


Murugesan
டிச 06, 2024 20:23

தமிழகத்தின் அவமானம் சுடலை முதல்வராக, அயோக்கியர்களை அமைச்சராக்கி ஊழல்ல வாழுகின்ற திராவிட திருடன்


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 20:18

ஆமாங்க தமிழக முதல்வரே , ஒரு வாரிசு தெனாவட்டா பேசுச்சு அதனை வைத்து உங்களை களங்கம் செய்யுறாங்களா ? அந்த வாரிசோட அடிவருடி ஒன்னு அதுவும் தெனாவட்டா பேசுச்சு ,வாரிசு குடும்பம் என்பதால் இவ்வளவு அகங்காரம் ஆகாது சார் , சொல்லிவையுங்களேன் ப்ளீஸ்


தமிழ்வேள்
டிச 06, 2024 19:33

களங்கத்தின் மீதே களங்கமா? எடுபடுமா? ஹையோ...ஹையோ....ஐயகோ...கோ..


Ganapathy
டிச 06, 2024 19:25

ஏற்கனவே களங்கப்பட்ட செந்தில் பாலாஜியை மந்திரியாக்கியது நீதானே? அவன் லஞ்சம் வாங்குவதில் மன்னன் அவன் கூட இருந்தால் நீயும் உன் ஊழல் திராவிட களவாணிகழக குடும்பமும் அவன் மூலம் லஞ்சம் வாங்கலாம்னுதானே அவனை நீ மந்திரியாக்கினாய்? இதில் வெளியாள் வேலையில்லாமல் திட்டமிடவேண்டுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை