வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விவசாயிகளின் எதிரி திமுக.... அது 1970ம் ஆண்டு அண்ணா மறைந்து கருணாநிதி ஆட்சிக்கு வந்து உழவனை வாழவைக்க வந்திருக்கின்றேன் என பேசிகொண்டிருந்தார். கருணாநிதியின் அரசியல் போராட்டமே விவசாயிகளிடம்தான் தொடங்கியது, காமராஜர் காலத்தில் உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் என பெரும் போராட்டம் நடத்தியவர் கருணாநிதி , அதிலும் நங்கவரம் விவசாயிகள் பக்கம் நின்று அவர் ஆடி தீர்த்ததெல்லாம் தனி வகை "நாடுபாதி நங்காவரம் பாதி" என விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் அரசியல் செய்ததெல்லாம் வரலாறு, அவர் அரசியல் அப்படித்தான் தொடங்கியது. ஆனால் கருணாநிதிக்கு விஷேஷித்த குணம் உண்டு, அது என்னவென்றால் எதிர்கட்சியாக இருந்தபொழுது கேட்கும் நியாயத்தை எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார், அவரின் பகுத்தறிவு அது. பெரும் ஞாபகசக்தி மிக்கவர் என சொல்லபடும் கருணாநிதிக்கு அந்த மறதி ஒரு சாபம், அப்படி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை மறந்து மின் கட்டணத்தை உயர்த்தினார். விவசாயிகள் போராட வந்தனர், எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு கட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்கு முறைகளைக் கையாண்டது அரசு. காவல் துறை கருணாநிதி கட்டுபாட்டில்தான் இருந்தது. கோயம்புத்தூர் பக்கம் பெருமா நல்லூரில் துப்பாக்கி சூட்டுக்கு ஆயிக்கவுண்டர், மாரப்ப கவுண்டர், ராமசாமி என்னும் இளம் விவசாயிகள் மூவர் பலியனார்கள். விஷயம் பெரிதானதும் மதுகடைகளை திறந்து வருமானத்தை சரி செய்து மேலும் மின்கட்டணம் உயராமல் பார்த்துகொண்டார் கருணாநிதி, தமிழகத்து சோதனை காலம் இங்குதான் தொடங்கிற்று. அடுத்த சிக்கலாக வங்கிகள் விவசாயிகள் நிலங்களை திமுக ஆட்சியில் கையகபடுத்த தொடங்கிற்று, அமைதியாக பார்த்துகொண்டிருந்தார் கருணாநிதி. விளைவு 1972-ம் ஆண்டு விவசாய ஜப்தி நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கனூரில் 5 விவசாயிகள் பலியானார்கள். தமிழ்நாடு கொந்தளித்தது, விவசாயிகள் மாட்டுவண்டிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர், ஆனால் கருணாநிதி அரசு இரக்கமின்றி சுட்டது. மதுரை மாவட்டம், வேடசந்தூர், திருநெல்வேலி மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த விவசாயப் போராட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீஸ் அடக்குமுறைக்கு பலியானார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு டில்லியில் போராடிய போது நீங்க எங்க போனீங்க?
டில்லியில் திமுகவினர் பணம் கொடுத்து நடத்திய போராட்டம் என்று பிறகு தெரிந்தது. 20 பேர் நடத்தியது போராட்டமா
நயினார் நாகேந்திரன் கூறுவது உண்மை என்பதனை யார் ஊர்ஜிதம் செய்யவேண்டும்