உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,

 நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,

கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகளில், ஆரம்பத்தில் இருந்தே மெத்தனம் காட்டியது தி.மு.க., அரசு தான். தற்போது, அளித்த அறிக்கையில், 'சென்னையை காட்டிலும், கோவையில் அதிக பயணியர் வருவர்.மூன்றே ஆண்டுகளில், மெட்ரோ பணி முடிக்கப்படும்' என, தவறான சாத்தியமற்ற தகவலை கூறியது. இப்படி, தப்பும் தவறுமாக தி.மு.க., அரசு அனுப்பிய அறிக்கையில் உள்ள தவறுகளை வெளிப்படுத்தி, கூடுதல் தகவல் கேட்டு, மத்திய அரசு திருப்பி அனுப்பியது. உடனே, ரத்து செய்து விட்டதாக, தி.மு.க., போலி நாடகமாடுகிறது. உண்மையில் தமிழக மக்களின் மீது அக்கறை இருந்தால், 'பி.எம்., - இ பஸ் சேவா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க முன் வந்த, 10,000 குளிர்சாதன மின்சார பஸ்களை, தி.மு.க., அரசு மறுத்திருக்குமா? 'மத்திய அரசு எதுவும் வழங்கவில்லை,' என, நீலிக்கண்ணீர் வடித்து போலி நாடகமாடும் தி.மு.க.,வின் பிளவுவாத அரசியலுக்கு மக்கள் துணை நிற்க மாட்டார்கள். - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை