உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை; குறட்டை விடும் அரசு என அன்புமணி குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை; குறட்டை விடும் அரசு என அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க., அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது' என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.அவரது அறிக்கை: மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரவுடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே தி.மு.க., அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் தி.மு.க., அரசு தோல்வியடைந்திருக்கிறது.தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் தி.மு.க., ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் தி.மு.க., அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது உறக்கத்தைக் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சங்கி
மார் 24, 2025 07:17

பாத்து கிழிசீங்க


vadivelu
மார் 24, 2025 01:51

அணி மாறி விட்டால் அப்படியே மாறி வுடுவார்


sankar
மார் 24, 2025 00:56

டாப் டு பாட்டம், கல்லா கட்டுவது மட்டுமே குறிக்கோள்


Ray
மார் 23, 2025 13:51

பல கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுக்க ஏராளமான வக்கீல்கள் உள்ளார்கள். நீதிமன்றங்கள் மூன்று கொலை வழக்குகளுக்குமேல், ஐந்து திருட்டு வழிப்பறி வழக்குகளுக்குமேல் உள்ளவர்களுக்கும் ஜாமீனை மறுக்க சட்டம் தேவை. ரவுடிகள் சிக்கினால் மாறுகை மாறுகால் இழக்கிறார்கள். அது தெரிந்தும் ரவுடிகளுக்குள் பழிவாங்கும் அல்லது யார் பெரியவன் என்று போர் தொடருகிறது. காலில் சுடாமல் தீர்த்துக் கட்டினால் அவர்கள் மனைவிகள் புலம்புகிறார்கள். காவல்துறை படைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் கடன் வாங்காமல் ஒன்றிய அரசின் உதவியில்லாமலே அதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை? நாளைக்கொரு டிவீட்டர் போட்டே கட்சி நடத்துகிறார்கள். இந்த அரசை யார்தான் வசைபாடவில்லை? போங்கடான்னு போயிட்டான்னா மாநில அரசியல் நாலைந்து முதல்வர்கள் கையில் சிக்கி சந்தி சிரிச்சுடும் என்பது மட்டும் சர்வ நிச்சயமா தெரியுது.


Ray
மார் 23, 2025 13:48

ஸ்டாலின் வேணாம் வேறு யார் முதல்வரா வந்தா இந்த கொலை கொள்ளையெல்லாம் ஒரே மாதத்துல சுச்சாப் செய்வாங்கன்னு ஒரு விவாத அரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். START NOW.


अप्पावी
மார் 23, 2025 12:35

சட்டம் டில்லில ஒரு நீதிபதி வீட்டில் சந்தி சிரிக்கிது.


Ganesh Subbarao
மார் 24, 2025 14:05

மாட்டிக்காம திருட தெரியல இதே திமுக நீதிபதி என்றால் மாட்டியிருக்க மாட்டார் ஐடியா இல்லாத நீதிபதி


Oviya Vijay
மார் 23, 2025 12:20

ராஜ்யசபா சீட் கொடுக்கிறேன்னு திமுக சொன்னா போதும். உடனே இந்த ஸ்டேட்மென்ட் அப்படியே மாத்தி பேசிருவாரு. ஒன்னு பொட்டி இல்லைன்னா பதவி... இந்த ரெண்டும் இல்லைன்னா தூக்கம் வராது போல... போன சட்டமன்ற எலெக்ஷன்ல தோத்தாலும் நன்றி உணர்வோடு ராஜ்யசபா சீட் கொடுத்த அதிமுகாவையே உதறித் தள்ளிட்டு, கோமாளிக் கட்சியோட சேர்ந்து நாடாளுமன்ற தேர்தல்ல நின்னு நோஸ்கட் ஆனது தான் மிச்சம்... திரும்பவும் ராஜ்யசபா சீட்டுக்காக யூ டர்ன் அடிச்சு எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு அதிமுகவுக்கு தூது அனுப்புறாங்களோ. கேவலமா இருக்கு உங்களோட இந்த அரசியல்... மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கோம்டி செல்லங்களா...


Velan Iyengaar, Sydney
மார் 23, 2025 12:54

வை கோ குருமா கட்டுமரம் எல்லாருமே மத்தியில் இப்போ ஆண்டு வரும் கட்சியுடன் கூட்டணி பதவிக்காக இருந்த வங்க.


vijai hindu
மார் 23, 2025 12:14

அவர் எங்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போறார் அவருக்கு கூட்டம் போடுறதுல்ல நேரம் சரியா இருக்கு மத்திய அரசை எப்ப பார்த்தாலும் குற்றம் சொல்றதுக்கு நேரம் சரியா இருக்கு தேவையில்லாம அரசு பணத்தை செலவு பண்றார் ஆனா ஒன்னு தன் குடும்பத்தை நல்லா பாதுகாக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை