உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் திமுக; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை. ஏற்கனவே, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளரின் மேல் பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், தற்போது ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் பெயரை போலீசார் இடைச்செருகலாக இணைத்திருப்பதாக அறிகிறேன்.தொடர்ந்து திமுக அரசின் தகிடுதத்தங்களை பொதுவெளியில் தனது சவுக்கு மீடியா மூலம் உரக்கப் பேசி வரும் சவுக்கு சங்கரை கைது செய்து முடக்குவதற்காகவே இந்த வேலையை போலீசார் செய்துள்ளனர். இதை நான் கண்டிக்கிறேன்.தேர்தல் வரும் முன் தங்களுக்கு எதிரான அனைத்து ஜனநாயக குரல்களையும் இந்த அரசு முடக்கிவிடலாம் என நினைக்கலாம். ஜனநாயக களத்தில் மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலோடு திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்பதே நிதர்சனம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
டிச 11, 2025 04:20

இன்று அவர்கள் தங்களைத்தானே குரல்வளையை நெரிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். இது பழைய மாணவர்கள் குழுமத்தின் சதி என்பது போல தெரிகிறது.


Ariram Singh K
டிச 10, 2025 21:53

அவருக்கு பாதகமான ஊடகத்தை மட்டுமே மிரட்டுவார் குறிப்பாக உண்மையை சொல்லும் ஊடகமே அவர்களின் முதல் குறி


தமிழனம்பு
டிச 10, 2025 21:13

ஊடகம் நான்கு தூண்களில் ஒன்று அதனை மிரட்டக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை