உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொடியை அகற்ற தலைமை உத்தரவு; அகற்றிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

தி.மு.க., கொடியை அகற்ற தலைமை உத்தரவு; அகற்றிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு ரோடுகளில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தி இருந்தார்.பொது இடங்களிலும் வைத்துள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விபரங்களை, கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று துரை முருகன் உத்தரவிட்டுள்ளார். இதனால் கட்சி கொடியை அகற்று பணி நடந்து வருகிறது.அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கேத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ( 58 ) பெருமாள் (46) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் (50) உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ராமமூர்த்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள கேத்து நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி தி.மு.க., கிளைக் கழக செயலாளராக பணியாற்றி வந்தார்.பொது இடத்தில் உள்ள தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சார கம்பி மீது சாய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி (50) உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

B MAADHAVAN
மார் 24, 2025 20:06

திமுக கொடிக்கு அவ்வளவு சக்தியா.. கொடியை அகற்றினாலேயே மின்சாரம் தாக்குகிறது என்றால், திமுக விற்கு எவ்வளவு சக்தி பாருங்கள். இறந்தவர் குடும்பத்தினருக்கு அடுத்த முறை கட்சி தலைமை பதவி எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் தான் அந்த உரிமை என்பதனால், மீண்டும் அவர்களுக்கு கொடி கம்பம் நடும் வேலை கொடுக்கப் படலாம்.


என்றும் இந்தியன்
மார் 24, 2025 16:14

திமுக தலை ஆபத்து திமுக அமைச்சர் ஆபத்து திமுக எம் எல் ஏ ஆபத்து இப்போ திமுக கொடிக்கம்பம் கூட ஆபத்தா????


SUBBU,MADURAI
மார் 24, 2025 19:21

செவிக்கினிய செய்தி எத்தனை அப்பாவி உயிரை வாங்கியிருப்பீர்கள் அதற்கு பதில்தான் இந்த கொத்தடிமை உபியின் உயிர் இனிமேலாவது திருந்துங்க திமுக


ராமகிருஷ்ணன்
மார் 24, 2025 14:24

கட்சி கொடியை எடுக்க சொன்ன தொரை முருகன் 10 பைசா கூட தரமாட்டார். போயி கேளுங்க பார்ப்போம்.


Barakat Ali
மார் 24, 2025 13:48

தொண்டன்தான் சாவான் ..... கொடுமை .......


sridhar
மார் 24, 2025 13:44

திமுக மட்டும் அல்ல, திமுக கொடிக்கம்பம் கூட உயிர்கொல்லி ஆபத்து தான்.


Anand
மார் 24, 2025 13:30

இனி அவரோட குடும்பம் ...?


Nallavan
மார் 24, 2025 13:02

ஆழ்ந்த அனுதாபங்கள்


N Sasikumar Yadhav
மார் 24, 2025 13:00

திமுக தீமை தரும் என்பது உண்மையாகிவிட்டது


Kjp
மார் 24, 2025 12:40

அதிமுக ஆட்சியில் அதிமுக விளம்பர போர்டு கழன்று ரோட்டில் டுவீலரில் போய் கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்து இறந்து போனதற்கு இப்போது உள்ள முதல்வர் உட்பட திமுகவினர் என்ன ஆட்டம் ஆடினார்கள். தந்தை வெட்டிய போர் குழியில் மகன் விழுந்து இறந்ததற்கு முதல்வர் பேசாத பேச்சா.இங்கு எதிர் கட்சிகள் சரியில்லை அவியல் பண்ணி கொண்டு இருக்கிறீர்கள்.


Karuthu kirukkan
மார் 24, 2025 12:23

காலையிலே கடை திறக்க மாட்டாங்களே ...கரண்டு கம்பி போனது தெரியலையோ ...


sridhar
மார் 24, 2025 13:46

எந்த மாநிலத்தில இருக்கீங்க, 24 மணி நேரமும் உண்டு, கள்ள சரக்கும் உண்டு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை