உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 18ம் தேதி தி.மு.க., சட்டத்துறை மாநாடு

சென்னையில் 18ம் தேதி தி.மு.க., சட்டத்துறை மாநாடு

சென்னை : தி.மு.க., சட்டத்துறை சார்பில், மூன்றாவது மாநில மாநாடு, சென்னையில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், கவர்னர் ரவி விவகாரம் ஆகியவற்றை, சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கம், தி.மு.க., சட்டத்துறை சார்பில், சென்னையில் நாளை மறுதினம் மாநில மாநாட்டில் நடக்க உள்ளது. கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், 'ஹிந்து' ராம் போன்றோர் பங்கேற்று பேச உள்ளனர். கவர்னரை மாற்றக் கோரும் தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.சென்னை பச்சையப்பன் கல்லுாரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், மாநாடு நடக்கிறது. முதல்வர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார் என, தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 16, 2025 12:59

சட்டத்தை மதிக்காதவர்கள் நடத்தும் மாநாடு. வெட்கக்கேடு...


Anantharaman Srinivasan
ஜன 16, 2025 12:08

சென்னையில் திமுக சட்டத்துறை மாநாடு. இது திமுக வீட்டு திருவிழா. You Dont worry ..


sankar
ஜன 16, 2025 08:42

சட்டத்தை மதிக்காத களவானிக்கூட்டம்


S.kausalya
ஜன 16, 2025 07:27

நீதி துறையில் இருப்பவர்கள் எல்லோரும் திமுக போட்ட பிட்சை என்றார் அக்கட்சியின்.... அப்போது அது என்ன மாநாடு


S.kausalya
ஜன 16, 2025 07:23

திமுகவின் சட்ட துறை மாநாடு. சிப்பு சிப்பா வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை