உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பின்னணியில் தி.மு.க.,வினர்: வீடியோ வெளியீட்டு அண்ணாமலை புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தி.மு.க,,வினரே காரணம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி ஆளும் தி.மு.க., அரசை விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டிற்கு தி.மு.க.,வினரே காரணம் என்றும், நாளை மதுரையில் இருந்து சென்னை வரை பா.ஜ.,வினர் நீதி கேட்பு பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்கப்படும் என்று கூறுவதும் இடம் பெற்றுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nlefgfc5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது தி.மு.க., தரப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கிலும், கைது செய்யப்பட்ட தி.மு.க., நிர்வாகியுடன், கைப்பேசியில் பேசிய நபர் யார் என்ற உண்மையை முழுவதுமாக மறைக்க முயற்சிக்கிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று, பாதிக்கப்பட்ட மாணவியை, பொதுவெளியிலும், மாமன்றத்திலும் அவமானப்படுத்தியும், மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசிய விட்டு, இனி யாரும் குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவிற்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க., அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில், முழு உண்மையும் வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், நாளை (ஜன.,03) மதுரையில் தொடங்கி, சென்னை வரை நடைபெறவிருக்கும் நீதி கேட்பு பேரணியில் பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Azar Mufeen
ஜன 02, 2025 22:55

ரெண்டு கட்சியும் .... கட்சிகளே


INDIAN
ஜன 02, 2025 15:11

அண்ணாமலை என்ன உருண்டு புரண்டாலும் , ஒரு பிரச்னை மக்களின் மனதில் இருந்து எதிர்ப்பு வரவேண்டும் , என்னதான் பெட்ரோலை ஊற்றினாலும் நெருப்பு இருந்தால் மட்டுமே எறியும் , முதலில் மக்களுக்கு பாஜக பெண்களுக்கு ஆதரவான கட்சி , ஒழுக்கமான கட்சி என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும் , அது வரவில்லையே . மற்றொரு கட்சி அதிமுக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்ட அதிமுக காரர்கள் மீது வழக்கு உள்ளது அவருக்கு மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது அதிமுக , முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை பாலியல் புகார் காவல்துறை தலைவர் வரை புகார் கொடுத்தது , மற்றொரு அமைச்சர் ரமணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது வீடியோவாக வளம் வந்தது அதன் அடிப்படையில் ஜெயலலிதா அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் அவருக்கும் மீண்டும் தேர்தலில் நிற்க சீட்டு கொடுத்தது அதிமுக , மற்றொரு அமைச்சர் உதவி கேட்டுவந்த பெண்ணை கர்ப்பமாகி அதை சரிக்கட்ட பணப்பேரம் பேசிய வீடியோ வெளியாகியாது , இந்த குற்றச்சாட்டுகள் எல்லாமே இவர்கள் மந்திரிகளாக இருந்தபோது நடந்தது அதற்க்கு இவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? தற்போது ஜெய்குமாரும் . ரமனாவும் போராட்டம் நடத்தினால் அதை மக்கள் அரசியலாகத்தான் பார்ப்பார்கள் . மேலும் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அளவுக்கு அதிகமாக நடந்துகொள்வது சாதாரண மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது , ஆகவே மக்கள் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அண்ணாமலையையும் ,அதிமுகவையும் நம்ப தயாராக இல்லை, முதலில் அதற்கு தகுதியானவர்களாக இவர்களை மக்கள் நம்பாமல் இவர்களை வைத்து போராடுவது அரசியலாக இவர்களுக்கு எதிராகவே முடியும்


Mohan
ஜன 02, 2025 15:06

நல்லா தான் புடிச்சி சம்பளம் குடுத்து வச்சிறுக்காங்க திராவிட விடியல் காரங்க எந்த செய்தி தினமலர்ல வந்தாலும் அது திராவிட விடியலுக்கு அசைக்க முடியாத ஆப்பு வச்சாலும், இந்த சம்பளக கிறுக்கனுங்க வழக்கமில்லாத, நம்பமுடியாத பொய்ப் பேரு வச்சிகிட்ட , வந்தேறி அடிவருடிகள், அந்த செய்தி எதுவானாலும் உடனே பாஜக வையும், மோடி அவர்களையும் கன்னா பின்னா என்று பேசுவதும், ஏட்டிக்கு போட்டியாக, நீ என்ன யோக்கியமா, அன்னிக்கு நீ என்ன கிழிச்சே, ன்னு பிரச்னையை மடை மாற்றி நல்லா வேலை செய்யறாங்க குடுத்த காசுக்கு. முக்கிய பிரச்னைகளில் மக்களை முட்டாளாக்குவது, அவிங்க கட்டுமரம் கத்துக்குடுத்த டெக்னிக்


T.sthivinayagam
ஜன 02, 2025 13:51

இப்ப அவன் எந்த கட்சி அப்புறம் எந்த மதம் அப்புறம் எந்த ஜாதி தமிழக அரசியல் கட்சிகள் அயோக்கியனுக்கு சாதகமாவா அல்லது பாதகமா புரியவில்லை


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 02, 2025 13:32

இருட்டு அறையில் முரட்டு குத்து போல இருக்கு


Dhurvesh
ஜன 02, 2025 13:24

இது போல் நிறய உள்ளது.


Dhurvesh
ஜன 02, 2025 13:22

கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா?


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 13:19

ரெகுலரா பக்கோடாஸ் என்று அழைத்து, பிரமுகர்களின் வண்டி கழுவி எசமான விசுவாசம் காட்டி பொருள் பெற்று வீட்டில் அடுப்பெரிய வகை செய்துகொள்ளும் போர்க்கி ஸ் , அந்த சம்பவம் நடந்து மூணு நாள் வரை கருத்தே போடல ....


Dhurvesh
ஜன 02, 2025 13:13

இந்த மகளிரணியை அப்படியே ஆந்திரா, UP, பீகார் வழியாக மணிப்பூருக்கும் அனுப்பி வைக்கவும். பாலுக்கு பூனை காவல்.


Dhurvesh
ஜன 02, 2025 13:12

பல ஆண்டுகள் ஆகியும் காஷ்மீர் அப்பாவி நாடோடி சிறுமி ஆசிபா வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவே இல்லையே ஏன் ? அந்த குற்றவாளிகளை கைது செய்யக்கூடாதென பேரணி சென்றது உங்க பாஜக தானே ஹத்ராஸ் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை