வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அரசு தங்களது கட்சிக்காக தொண்டர்களை வளர்கிறதே தவிர மக்களை வளர்க்கவில்லை மக்களுக்காக பாடுபட பயன்பட எந்த திட்டமும் இல்லை
வேற யாரும் பேரு வாங்கிற கூடாது .... இல்லன்னா கட்டிங் கொடுக்கணும் ....
கமிசன் கூட்டி குடு சரியாகும்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் டெண்டர் விட்ட பணிகளை நடத்த விடாமல், தி.மு.க.,வினர் முட்டுக்கட்டை போடுவதாக, வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 20 பேர் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.கலெக்டர் ஜெயசீலனிடம், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பணிகளை தொடர அனுமதிக்க கோரி, ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், துணை தலைவர் ராமராஜ் பாண்டியன் தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அளித்த பின், இருவரும் கூறியதாவது:பணிகளை நிறுத்த தி.மு.க.,வினர் உத்தரவிட்டுள்ளனர். கலெக்டரிடம் மனு அளித்தும் பல்வேறு காரணங்களை சுட்டி காட்டி நிராகரிக்கின்றனர். தீர்மானம் போட்டு பணிகள் ஒதுக்கி, பி.டி.ஓ.,க்கள் அனுமதி அளித்து, இரண்டு மாதங்கள் ஆகின்றன. இப்போது நிறுத்துவது நியாயமல்ல.தற்போது உபரிநிதியாக, 5.44 கோடி ரூபாய் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்ட நிர்வாகம் தரப்பில்,'ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முன்னுரிமை பட்டியலில் இல்லாத பணிகள் என தெரிய வந்ததை அடுத்து, அது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
அரசு தங்களது கட்சிக்காக தொண்டர்களை வளர்கிறதே தவிர மக்களை வளர்க்கவில்லை மக்களுக்காக பாடுபட பயன்பட எந்த திட்டமும் இல்லை
வேற யாரும் பேரு வாங்கிற கூடாது .... இல்லன்னா கட்டிங் கொடுக்கணும் ....
கமிசன் கூட்டி குடு சரியாகும்