உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 181 ஆண்டு தாமிரபரணி பாலத்தில் ஓட்டை போட்ட தி.மு.க.,வினர்

181 ஆண்டு தாமிரபரணி பாலத்தில் ஓட்டை போட்ட தி.மு.க.,வினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே 181 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில், தி.மு.க.,வினர், 'ட்ரில் மெஷின்' கொண்டு ஓட்டை போட்டதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி, கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே, 1843ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதிகாரியாக பணியாற்றிய சுலோச்சனா முதலியார் நிதியில் கட்டப்பட்ட பாலம் அவரது பெயரில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yz6tbqfa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலியில் நேற்று அமைச்சர் நேரு பங்கேற்ற தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக ஆற்றுப்பாலம் முழுதும் இரு புறங்களிலும், ட்ரில் மெஷின் கொண்டு ஓட்டை போட்டு, இரும்பு கம்பிகளில் கட்சி கொடிகளை ஏற்றினர்.பழமையான பாலத்தில் இவ்வாறு தி.மு.க.,வினர் ஓட்டை போட்டதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் கணேசராஜா, அமைப்பு செயலர் சுதா பரமசிவம் தலைமையில் அக்கட்சியினர் பங்கேற்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, அ.தி.மு.க.வினர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாவிடம் புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

நிக்கோல்தாம்சன்
ஜன 01, 2025 06:52

16 கோடியில் கழகம் கட்டிய பாலத்தின் பலத்தை வெள்ளத்தில் அது நீந்திக்கொண்டு சென்றதை பார்த்தோமே , அதை போன்று எதற்கு இந்த பாலம் செல்லவில்லை என்று நோண்டி பார்த்துள்ளனர் கழகத்தினர் , அதனை போயி ?


Varadarajan Nagarajan
டிச 29, 2024 20:08

பொது சொத்தை சேதப்படுத்துவது என்ற பிரிவு இவர்களுக்கு பொருந்தாதா? பொருந்தும் எனில் நீதிமன்றமே நேரடியாக வழக்காக பதிவுசெய்து விசாரிக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு எதிராக யாரும் புகார் அளிக்கமாட்டார்கள்.


Venkateswaran Rajaram
டிச 29, 2024 19:16

முட்டாள்களிடமும் கொள்ளையர்களிடமும் மூர்கர்களிடமும் ஊழல்வாதிகளிடமும் அரக்கர்களிடமும் ஆட்சியை கொடுத்தது நம் தவறு ...இனியாவது நன்கு சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்


சாண்டில்யன்
டிச 30, 2024 20:12

2014லிலேயே நான் சொன்னதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துட்டார்


sankaranarayanan
டிச 29, 2024 18:35

பழமை வாய்ந்த தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில், தி.மு.க.,வினர், ட்ரில் மெஷின் கொண்டு ஓட்டை போட்டதை கண்டித்து உச்சநீதிமன்றமே வழக்கு தொடர வேண்டும் இப்படியே சென்றால் ஆட்சி செய்கிறோம் என்ற முறையில் எல்லாவற்றிலும் ஓட்டை போடுவார்கள்.சாலைகளில் ஓட்டைகள் போதாதென்று இப்போது ஆற்றுப்பாலத்திலும் போட ஆரம்பித்து விட்டார்களா?


என்றும் இந்தியன்
டிச 29, 2024 17:47

திராவிடம் என்பது மனிதம் அல்ல என்று சொல்கின்றது இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஒவ்வொரு செயலும்


M Ramachandran
டிச 29, 2024 16:19

அடாவடி தீ மு க்கா இயற்கைக்கு விரோதிகள்


Vijay D Ratnam
டிச 29, 2024 15:45

181 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மோட்டார் வாகனங்கள் இல்லாத காலக்கட்டத்தில் குதிரை வண்டிகள், மாட்டுவண்டி வண்டிகள் செல்வதற்கு போடப்பட்ட பாலம் இன்று கனரக வாகனங்கள் சென்றுகொண்டு இருக்கிறது. அதை சேதப்படுத்திய அந்த சமூக விரோதிகளை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். பாலத்தை டேமேஜ் செய்துவிட்டு புதிதாக பாலம் கட்டி காசு பார்க்கும் ஐடியாவாக இருக்கும். தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திலேயே ஆணி அடித்த அறிவுகெட்ட முட்டாப்பயலுவோ இவனுங்க.


magan
டிச 29, 2024 14:21

ஓட்டை போட்டாதான் புதுசா டெண்டர் விடமுடியும் இது கூட தெரியலயே உங்களுக்கு


surya krishna
டிச 29, 2024 12:47

kedukeeta ayokkiyarkal


G Mahalingam
டிச 29, 2024 12:10

கேடு கெட்ட ஆட்சி. கோர்ட் தானாகவே முன் வந்து 100 கோடி அபராதம் விதிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ