உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி இன்று காலமானார்.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kz432933&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொன்னுசாமி சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தலைவர்கள் இரங்கல்

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

சேந்தமங்கலம் தொகுதியின் எம்எல்ஏ பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கவர்னர் ஆர்.என்.ரவி

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது சேவை மற்றும் சமூக நலனுக்கான அவரது பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்த்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Perumal Pillai
அக் 23, 2025 14:27

திமுக MLA.


RAAJ68
அக் 23, 2025 11:08

அந்தத் தொகுதிக்கு ஆக்டிங் எம்எல்ஏ யார்.


Raj
அக் 23, 2025 10:40

ஆழ்ந்த அனுதாபங்கள்.


Field Marshal
அக் 23, 2025 10:21

செந்தில் பாலாஜி அனுதாபம் தெரிவிக்க சென்றாரா? அல்லது எதிர்பாராமல் நடந்து விட்ட துக்க நிகழ்வா ?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2025 10:18

ஆறு ஏழு மாசம் முன்னாடியே போயிருந்தா இடைத்தேர்தல் லாட்டரி தொகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். தொகுதி மக்களுக்கு கொடுப்பினை இல்லே, வேற என்னத்த சொல்ல முடியும்.


ஆரூர் ரங்
அக் 23, 2025 09:37

வாக்காளர்களுக்கு அனுதாபங்கள்.


Arul. K
அக் 23, 2025 09:22

இடை தேர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் பறிபோய்விட்டது


சமீபத்திய செய்தி