உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு

சென்னை : சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீது விவாதம் துவங்கியது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று புறக்கணித்தனர்.

சட்டசபைக் கூட்டத்தொடர், கடந்த 4ம்தேதி துவங்கியது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வதற்கு முன், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு ஒரே வரிசையில் இடம் அளிக்காததைக் கண்டித்து, தி.மு.க., சட்டசபைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஒரே வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. இதில், தி.மு.க., உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கவில்லை என்றால், இந்தக் கூட்டத்தொடர் முழுவதையும், அவர்கள் புறக்கணிப்பார்கள் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை