இன்று தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்
சென்னை: தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று மாலை நடக்கிறது. இதில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள் ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.