உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு

தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதல்வர் குடும்பம் உட்பட தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல ஹிந்தித் திணிப்பு அல்ல. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eyl9l8a6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான். இந்த நிலையில், இன்று சட்டசபையில், ஹிந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை ஹிந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற தி.மு.க.,வின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 - 25ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26ம் ஆண்டு நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க., அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதல்வர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Priyan Vadanad
மார் 25, 2025 21:16

ஒன்றிய காசு நடத்தும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஆசிரியரே போடவில்லை என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில் வந்ததாக கேள்வி. இவர் என்னடாவென்றால் ஹிந்தி கற்பிக்க ஆசிரியர்கள் என்கிற நன்றியில்லாமல் பேசுகிறார். அரசியலுக்காக ஏதாவது உளறிகொண்டு செய்தியில் இடம் பிடிக்க தவிக்கிறார்.


spr
மார் 25, 2025 19:39

இப்படித் தேவையில்லாமல் பேசுவதை விட, திரு ரங்கராஜ் பாண்டேவைப் பார்த்தாவது திரு அண்ணாமலை பாஜகவுக்கு எப்படி ஆதரவு திரட்டலாம் என்று கற்றுக் கொண்டால் நல்லது. அதனால் தமிழகம் அடைந்த பலன்களைப் பட்டியலிட்டு மக்களுக்கு உணர்த்தலாம். பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவர். பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். என்பதை புரிந்து கொண்டால், தனிப்பட்ட முறையிலாவது பாராட்டப்படுவார். அவருக்கும் நல்லது ஆனால் நம் அரசியல்வியாதிகள் எவரும் இதனைப் படிக்க வாய்ப்பில்லை. படிக்கவும் மாட்டார்கள்.


Ramesh Sargam
மார் 25, 2025 18:31

ஹிந்தி மொழியை எதிர்க்கும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இருந்து ஹிந்தி மொழி மூலம் கற்பிப்பதை நிறுத்தட்டும் பார்க்கலாம்.


konanki
மார் 25, 2025 17:41

நாளை முதல் ஸன் ஸைன், விஜய் வித்யாஸ்ரம், கிங்ஸ், என கொத்தடிமை குடும்ப பள்ளிகளில் இரு மொழி கொள்கை அமல்


konanki
மார் 25, 2025 17:39

கதறல் பிதறல் பயம் இருநூறு நிந்து விடுமோ


Youvaraj V
மார் 25, 2025 16:30

உண்மை


J.Isaac
மார் 25, 2025 16:24

தி.மு.க, திமுக என்று விடிய விடிய கத்தி பேட்டி கொடுத்து தான் எந்த கட்சி என்பதை மறந்து இவர் திமுகவோடே ஒட்ட போகிறார். மக்கள் காதிலும் தி்முக, தி்முக என்று தினமும் கேட்டு கேட்டு அதே ஞாபகத்தில் திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள்


vivek
மார் 25, 2025 16:24

ஏல.....ரெண்டு கொதாடிமைகும் பதில் தெரியாதா???


Mario
மார் 25, 2025 16:05

பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


N Sasikumar Yadhav
மார் 25, 2025 16:31

இலவசத்திற்கும் ஓஷிக்கும் ஆசைப்பட்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் உங்கள மாதிரியான ஆட்கள் இருக்கும்வரை காமராஜரே வந்து தேர்தலில் நின்றால் தோல்விதான் கிடைக்கும்


அறிஞர் அண்ணாமலை என்ற அண்ணா
மார் 25, 2025 18:58

1949ல் ராபின்சன் பூங்காவில் இருந்து ஆரம்பித்த திமுகா ஆட்சியை பிடித்தது 1967 இடைவெளி 18 வருடம். தமிழ் நாட்டில் அண்ணாமலை வரவு 1921, கூட்டனி ஆட்சி 2026ல் அமைக்க போகிறார். இடைவெளி 5 வருடம். பிஜேபி யை இப்ப நோட்டா கட்சி ன்னு சொல்ல முடியல அதனால் அண்ணாவை ஏசுகிறீர்கள். உங்கள் ஏச்சுக்கலும் பேச்சுக்கலும் ஒன்றை உனர்த்துகிறது, உங்களுக்கு அண்ணா சிம்ம சொப்பணம்


Narayanan Muthu
மார் 25, 2025 15:22

இவர் ஜோக்கரா இல்ல


N Sasikumar Yadhav
மார் 25, 2025 16:33

அமிச்சர் சோகர்பாபு சொல்வதைபோல 100 இல்லை 200 ஆண்டு வாழவேண்டும் . உங்களுக்கு புரியுமென தொணை மொதல்வர்கூட சொல்லியிருப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை