உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி

மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hblev1t6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை வடபழனி ஆற்காடு சாலை அருகே, பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது, விருகம்பாக்கம் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் அடியாட்களான, 136-வது வட்ட தி.மு.க., பொருளாளர் கார்த்தி மற்றும் வினோத் ஆகிய நபர்கள், காவல்துறையினர் கண்முன்னே, கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமிர் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? கனிமொழி எம்.பி., பங்கேற்ற விழாவில், பெண் காவலரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதும் இதே பிரபாகர் ராஜாவின் அடியாட்கள்தான். தொடர்ந்து, பிரபாகர் ராஜாவின் அடியாட்களின் அராஜகம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குறைந்தபட்சம், இந்தப் பகுதிகளில், 'தி.மு.க.,வினர் உலவும் பகுதி, பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும்' என்ற எச்சரிக்கைப் பலகையாவது வைத்தால், பொதுமக்கள், தாங்களே முன்னெச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramesh Sargam
ஏப் 21, 2025 21:51

திமுக குண்டர்களின் அராஜகத்தை கண்டுகொள்ளாத தமிழக காவல்துறை இருந்து என்ன பயன்? காவல்துறை இருப்பது மக்களின் பாதுகாப்புக்காகவா அல்லது திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவா?


SIVA
ஏப் 21, 2025 21:23

திமுகவினர் அவர்களுக்கேய தெரியாமல் எதோ நல்லது செய்கின்றனர் அதில் இதுவும் ஒன்று , எங்கும் எதிலும் லஞ்சம் , இந்த ஊழால் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் வந்தாலும் இவர்களுக்கு மட்டும் சம்பளம் , போனஸ் , ஒய்வூதியம் வேறு .......


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 21, 2025 20:00

அண்ணாமலை பல்லடத்தில் ஒரு கவுன்சிலர் போஸ்டுக்கு கூடிய சீக்கிரம் தேர்தல் வருது. முடிஞ்சா தேர்தல்ல போட்டிபோட்டு முடிஞ்சா ஜெயித்து அட்லீஸ்ட் ஒரு கவுன்சிலர் ஆவுது போஸ்டிங் வாங்கிட்டு அப்புறமா வந்து கூவு. எம்எல்ஏ, எம்பி எலெக்ஷன் தான் ஜெய்கலே பார்ப்போம், கவுன்சிலர் எலெக்ஷன்லயாவுது முடியுமா?


சந்திரன்
ஏப் 22, 2025 07:12

கொத்தடிமை உலவும் பகுதி வாசகர்கள் ஒதுங்கி போகவும்


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 21, 2025 18:42

அறிக்கை அண்ணாமலை அப்படியே limelight இருக்காராம்! நைநார் அண்ணன் அமித் ஷா கிட்ட பேசி அடக்கபோராரு பாருங்க.


சக்ரபாணி
ஏப் 21, 2025 18:18

முதலில் நீ தலவனுமில்லை. ஒரு கவுன்சிலர் கூட இல்லை. அப்புறம் எதுக்கு?


PalaniKuppuswamy
ஏப் 21, 2025 18:04

என்ன அண்ணாமலை இன்னும் சின்ன பிள்ளை போல் நேர்மையாவரிடம் கேள்வி கேட்பதாக நினைத்து கேடு கேட்ட திருட்டு தீய சக்தி கேட்டல் எப்படி பதில் கிடைக்கும் . தீமூகா என்றாலே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று தான் உலகம் அறிந்த உண்மை . 11 மணிக்கு தேர்தல் முடிவு என்றால் 11.05 மண்ணை அள்ளுங்கள் திருடுங்கள் .. என்று ஒரு திருடன் தன் கூட்டத்திற்கு அதிகார கட்டளை இடுகிறான் ... ஒருவன் காவல் துறை மல சாக்கடையை வேண்டாதவர் வீட்டில் கொட்டி ரகளை செய்கிறான் . எங்கே சட்டம் ஒழுங்கு . காவல் துறை தமிழ்நாட்டில் உள்ளது . வெறும் போக்கிரிகளின் ஆட்சி .. உங்கள் கேள்வி செவிடன் காதில் விழுந்த இடி


P. SRINIVASAN
ஏப் 21, 2025 17:39

மணிப்பூர் பத்தியெரியுது அத பாரு முதல்ல


vivek
ஏப் 21, 2025 17:53

அறிவிலி ......முதல்ல தமிழ்நாட்டை பாரு கொத்தடிமை


சந்திரன்
ஏப் 22, 2025 07:10

முதலில் உன் முதுகை பாருங்க உங்க வீட்டில ஒருத்தன் உள்ளே பூந்து கலாட்டா பண்ணும்போது எதிர்வீட்ட பார்ப்பிங்களா


Palanisamy Sekar
ஏப் 21, 2025 17:14

நாய்கள் ஜாக்கிரதை என்பது போல போர்டு வைக்க அண்ணாமலை சொல்வது கூட இந்த விடியா அரசு சிந்திக்கலாம். பொதுமக்களும் சற்றே உஷாராக இருப்பார்கள். ஆட்சி மாறனும் அதன் பின்னர் இருக்குது இவர்களுக்கு பூஜையும் புனஸ்காரமும். இன்னும் சில மாதங்கள் மட்டுமே பொறுத்திருப்போம். அதன் பிறகு இவர்களின் ஆட்டம் அடக்கப்படும் உறுதியாக


Bala
ஏப் 21, 2025 17:00

இது நல்ல ஐடியாவாக இருக்கே. "இது தீய சக்தி திமுகவினர் உலாவும் பகுதி. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கவும் " இந்த மாதிரியெல்லாம் தாக்குதல்கள் நடந்தால் இப்படியெல்லாம் எச்சரிக்கை பலகை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை


vivek
ஏப் 21, 2025 16:57

வரதராஜன் போன்ற கொத்தடிமைகள் உலவும் பகுதி...வாசகர்கள் கவனத்துடன் ஒதுக்கி தள்ளவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை