உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை எனக் கூறி, மத்திய பா.ஜ., அரசை கண்டித்து இன்று(ஜூலை 27) மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த, 2 தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி என, தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை முற்றிலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூலை 27) தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ugqwatxl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,எம்.பிக்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையிலும், திருவண்ணாமலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.தூத்துக்குடியில் கனிமொழி தலைமையிலும், தேனியில் தங்க தமிழ்செல்வன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர், சேலம் , உள்ளிட்ட பல நகரங்களிலும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கனிமொழி கேள்வி

தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என சொன்னால் மோடியால் நாட்டை எப்படி வழி நடத்த முடியும்? என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Gajageswari
ஆக 03, 2024 12:52

பணம் பணம் பணம்


கண்ணன்
ஜூலை 27, 2024 18:09

வெட்டி உதார் விடும் படிப்பறிவற்ற திருட்டுக் கூட டம்


sridhar
ஜூலை 27, 2024 17:19

கனிமொழிக்கு பதில் - வரி கொடுக்காட்டி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும், சும்மா உதார் உடாதே ..


J.V. Iyer
ஜூலை 27, 2024 17:13

எவ்வளவு ஊழல் செய்தாலும் மக்கள் இந்த ஊழல் மாடல் கட்சிக்கு மதிகெட்ட ஹிந்துக்கள் வோட்டுப்போடுவது எதனால் என்ற விடை மட்டும் தெரிந்தால்.


Ganesun Iyer
ஜூலை 27, 2024 16:42

இவளோ எதிர் கருத்துகள் போட்டாலும் ஓட்டு என்னவோ ஊழல் கட்ச்சிக்குத்தான்...


N.Purushothaman
ஜூலை 27, 2024 16:40

நல்ல வேளை ...உண்ணாவிரதம் இருக்கப்போறோம்ன்னு கெளம்பல ....அம்புட்டு திருட்டுப்பயலுவோலும் கையை தூக்கி நான் திருடன் இல்லைன்னு சொல்ற மாதிரி இருக்கு ...


Rengaraj
ஜூலை 27, 2024 16:16

தலைவர்களே வெள்ளத்துக்கு கொடுத்த நிதிக்கு கணக்கு கேட்கறாங்க தப்பில்லையே பேசமா வெள்ளை அறிக்கை தரவேண்டியதுதானே நீங்க கேட்டது என்ன அவங்க தந்தது என்ன அப்படின்னு புட்டு புட்டு வைக்கலாமே


Godyes
ஜூலை 27, 2024 16:10

குடுக்கற வரியில் தான் மத்திய அரசு நடக்கிறதா.


R Kay
ஜூலை 27, 2024 15:17

குடும்ப கொத்தடிமைகள் கூட்டம்


R Kay
ஜூலை 27, 2024 15:16

காமெடி பீசுங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி