உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருத்தம் தெரிவித்தார் தி.மு.க., ராஜிவ் காந்தி

வருத்தம் தெரிவித்தார் தி.மு.க., ராஜிவ் காந்தி

சென்னை:சென்னையில் தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த விழாவில் காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக ராஜிவ் காந்தி பேசியதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய படத்துக்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து சமூக வலைதளங்களில் காங்கிரஸார் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் ராஜிவ் காந்தி வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை:சில தினங்களுக்கு முன் 'காமராஜரும், கருணாநிதியும்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.காமாஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தை தெரிவித்தனர். காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை.காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. என் பேச்சை வைத்து 'இண்டியா' கூட்டணிக்குள் உரசல் என விஷம பிரசாரம் செய்து மத பாசிச கும்பலும், அடிமை அ.தி.மு.க.,வும் குளிர் காய விரும்புகிறது.அதற்கு ஒரு போதும் என் பேச்சு இடம் தராது. நான் பேசியதன் வாயிலாக மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தை மனதார தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான் ஒரு மன நோயாளி

'முதல்வராக நான் பொறுப்பேற்றதும் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் இருக்கிறது. புதிய வாழ்த்துப் பாடலாக பாரதிதாசன் பாடலை வைப்போம்' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அதை விமர்சித்து, தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மொழியை அடிமைப்படுத்துகிற மத்திய அரசை எதிர்த்து பேச திராணி இல்லை. தமிழை நீஷபாஷை என சொன்ன ஆரியத்தை எதிர்த்து பேசவில்லை. இயக்கம் நடத்து என சொன்னால் அதை செய்யாமல் தமிழர்களை தீண்டதகாதவர்கள் என சொன்ன மனுதர்மத்தை எதிரி என சொல்லாமல் தமிழ் மொழியை, தமிழகத்தை பாதுகாத்த, பாதுகாக்கும் திராவிட தத்துவத்தை தான் எதிர்த்து பேசுவேன் என ஒருவர் சொன்னார் என்றால் ஒன்று அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல் வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
அக் 23, 2024 06:15

அது என்ன பேசுவது எல்லாத்தையும் பேசிவிட்டு கடைசியில், "வருத்தம் தெரிவிக்கிறேன்,


xyzabc
அக் 23, 2024 03:02

வெட்க கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை