அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., ஆட்சி துரோகம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிந்துரைக்க, தமிழக அரசால் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆறு மாதங்களாகியும், இக்குழு அடிப்படை பணிகளை கூட துவங்கவில்லை. ககன்தீப்சிங் பேடி குழு இன்று வரை தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் அணுவைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். ஆனால், அந்த பணி வரம்புகள் என்ன? என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அந்த அளவுக்கு ரகசியம் காக்கிறது. தங்களை ஆட்சியில் அமர்த்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, தி.மு.க., அரசுக்கு மனமில்லை. அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்காகவே, தமிழக அரசு குழு அமைத்தது; இது பெரும் துரோகம். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,