உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச்சை பேச்சு: ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் !

சர்ச்சை பேச்சு: ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவை, தி.மு.க.,வுக்கு எதிராக துாண்டிவிட்டு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 'டபுள் கேம்' ஆடுவதாக தி.மு.க., நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h4l3a944&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆதவ் அர்ஜுனாவின், 'வாய்ஸ் ஆப் காமன்' அமைப்பு சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்' என்றார்.அதேபோல, நுாலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசுகையில், '200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் எகத்தாளமாக முழக்கமிடுகின்றனர். சுயநலத்துக்காக தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில், மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்' என்றார்.

பூசி மெழுகினார்

தி.மு.க.,வை நேரடியாக தாக்கி இருவரும் பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. நுால் வெளியீட்டு விழாவில் விஜய் உள்ளிட்டோர் விவகாரமாக பேசுவர் என்பது தெரிந்து தான், வி.சி., தலைவர் திருமாவளவன் அந்த விழாவுக்கு போகக்கூடாது என, தி.மு.க., தரப்பில் நெருக்கடி தரப்பட்டது.அந்த நெருக்கடிக்கு பணிந்த திருமாவும், 'தி.மு.க., கூட்டணியை உடைக்க சதி நடப்பதால், நுால் வெளியீட்டு விழாவுக்கு செல்லவில்லை' என்று கூறி விழாவை புறக்கணித்து விட்டார்.அதேநேரத்தில், விழாவில் தி.மு.க.,வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 'ஆதவ் பேச்சுக்கும், வி.சி., கட்சிக்கும் சம்பந்தமில்லை' என்றும் பூசி மெழுகினார்.ஒரு பக்கம் ஆதவுக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் பேச்சு என, திருமா 'டபுள் கேம்' ஆடுவதாக கூறப்பட்டது. 'தி.மு.க., கூட்டணியிலிருந்து, வி.சி.,யை கழற்றி விட வேண்டும்' என, கட்சி தலைமைக்கு நிர்வாகிகளும், மா.செ.,க்களும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தல் வரை, தி.மு.க.,வின் வியூக வகுப்பு குழுவில் இருந்த ஆதவை, ஆட்சிக்கு வந்ததும் கட்சி தலைமை ஒதுக்கியது. அதனால், தன்னுடன் நட்பாக இருந்த திருமாவோடு கைகோர்த்த ஆதவ், வி.சி., கட்சியில் இணைந்து துணை பொதுச்செயலரானார். அன்றிலிருந்தே, தி.மு.க.,வுக்கு எதிராக ஆதவ் செயல்பட்டு வருகிறார்.

ஆட்சியில் பங்கு

ஆதவ் யோசனைப்படியே, கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை திருமா நடத்தினார். அடுத்த கட்டமாக, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தையும் ஆதவ் எழுப்பினார்.இதன் தொடர்ச்சியாகவே, 'கூட்டணி கட்சி களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்போம்' என, தன் கட்சியின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்தார். இதுபற்றி கேள்வி எழுப்பிய போது, 'ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, கட்சி துவங்கிய நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்' என்று கூறி திருமா சமாளித்தார்.ஒரு பக்கம் ஆதவ் செயல்பாடுகளை ஆதரிப்பதும், இன்னொரு பக்கம் தி.மு.க.,வை சமாதானப்படுத்துவதுமாக, திருமா 'டபுள் கேம்' ஆடுவதாக தி.மு.க.,வினர் நினைத்தனர். இந்த விபரத்தை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடம், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என, பலரும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

அவசரம் கூடாது

ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான், 'அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது' என்று கூறி எல்லாரையும் சமாளித்து வருகிறார். அத்துடன், ஆதவை வி.சி.,யிலிருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., மேலிடம் தரப்பில், திருமாவுக்கு நெருக்கடியும் தரப்படுகிறது. இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.இதற்கிடையில், சொந்த கட்சி மற்றும் தி.மு.க., தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு நெருக்கடி அதிகரித்ததால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பு வெளியானது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 09, 2024 23:49

என்ன அனுபவம் உங்களுக்கு. இந்த யோசனையை கரூர் பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை விமரிசனம் பண்ணினபோது உங்க தலீவார் கிட்ட சொல்லி இருக்க கூடாதா?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 20:12

தலைப்புக்கு கீழேயுள்ள போட்டோவில் அதென்ன திருமாவின் நெற்றியில் திருநாமம் சரியாக மேட்ச் ஆகுதே .... நோ .... நோ ... அது ஆச்சரியக்குறி .......


theruvasagan
டிச 09, 2024 19:33

6 மாசம் இடைநீக்கம் கண்துடைப்பு. ஆதவ்வை சஸ்பெண்ட் செஞ்சதுக்கு காரணம் வெளியில அனுப்புற மாதிரி விட்டுட்டு தவெகவில் நல்ல ஆஃபர் ஏதாச்சும் கிடைக்குமா என்று ஆழம் பார்க்குறதுக்காக. அங்க அனுகூலமாக இருந்தால் நைசாக கழுவற மீன்ல நழுவற மீன் மாதிரி நழுவி அங்க போய் ஒட்டிக்கலாம்ல. இவ்வளவு நடந்த பிறகு இத்தனை நாள் பிச்சை போட்டவங்க உஷாராகி கழட்டி விட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம் அல்லவா. அதை எதிர்கொள்ளத்தான் இந்த யுக்தி.


RAAJ68
டிச 09, 2024 19:29

எல்லாம் நாடகம் நாடகம் நாடகம். திருமா. எப்பொழுது முதல் நெற்றியில் நாமம் போட ஆரம்பித்தார்


Barakat Ali
டிச 09, 2024 20:59

ஆமால்ல .. ? வாக்கியத்தின் பின்னால் இவ்வளவு இடம் விட்டா ஆச்சரியக்குறி வரும் ?


BHARATH
டிச 09, 2024 18:58

இடை நீக்கம் ஆச்சர்ய குறி திருமா நெற்றியில் இருக்கு. நான் என்னமோ அவர் அய்யங்கார் ஸ்டைலில் போஸ் குடுத்தார்ன்னு நினைச்சுக்கிட்டேன்.


பாலா
டிச 09, 2024 18:31

பிளாஸ்டிக் கதிரைக்கு உரியவனின் மக்கள் ஆட்சிக் கட்சி? வாயில் வடை சுடுபவன்


ghee
டிச 09, 2024 17:52

அங்கே காங்கிரஸ்க்கு ஆப்பு வைக்க போறாங்க...இங்கே திமுகவுக்கு ஆப்பு வைக்க மக்கள் ரெடி ஆயிட்டாங்க.....


சாண்டில்யன்
டிச 10, 2024 23:29

IT IS NOT GHEE. IT IS BUTTER - UNCOOKED. பச்சை மண்


வைகுண்டேஸ்வரன்
டிச 09, 2024 16:10

திருமா வை பாஜக வினர் பார்த்து விமர்சியுங்கள். திருமா வின் அடுத்த நடவடிக்கை பாஜக வுக்கு காவடி எடுப்பது தான்.


பை தண்டன் சிங்கார சென்னை
டிச 09, 2024 21:30

உன் நிலமைய நினைத்தால் ரொம்ப பாவம். தீய மூ கா பா ஜ பி ஓட கூட்டு வைச்சா உன் முட்ட அங்க குடுக்கணும். பாவம் அடிமை வாழ்கை வைகுண்டா


Oviya Vijay
டிச 09, 2024 15:54

இதற்காக ஓயாது உழைத்த தினமலருக்கு கிடைத்த வெற்றி...


ghee
டிச 09, 2024 17:27

அப்போ கொதடிமகளுகு தோல்வியா


நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 05:02

தினமலரில் மாத்திரம் வாசகர்கள் எந்த நிலை எடுத்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க , உங்க கார்பொரேட் கம்பெனி குடும்ப ஊடகங்களில் இது சாத்தியமா என்று சொல்லேன் , ஒருவாரம் நடுநிலையாக பதிவுகளை அங்கே போட்டுப்பாரு , அப்புறம் இங்கே வந்து சொல்லு , ஒரு வாசகியாய் நான் தினமலரை ஆதரிக்கிறேன்


ellar
டிச 09, 2024 15:51

நடிகர் விஜய் வழக்கம்போல் எழுதிக் கொடுக்கப்பட்டதை பேசுகிறார் அவருடைய முதலாளி யார் என்பதை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம் ஏன் பேசுகிறார் என்பது சிந்தித்தால் தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை