உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளம் துார்வார ரூ.1 லட்சம் கேட்ட தி.மு.க., செயலர்

குளம் துார்வார ரூ.1 லட்சம் கேட்ட தி.மு.க., செயலர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், குளம் துார்வார, 1 லட்சம் ரூபாய் கேட்ட தி.மு.க. ஒன்றிய செயலரை பொதுமக்கள் வழி மறித்த வீடியோ பரவி வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பிசிலி குளத்தை துார்வார, அதிகாரிகள் அனுமதி பெற்று மக்கள் மண்ணை அள்ளினர். அப்போது, அங்கு வந்த தி.மு.க., கிள்ளியூர் மேற்கு ஒன்றிய செயலர் கோபால், குளத்தில் இருந்து துார்வாரி மண் எடுக்க வேண்டுமானால், தனக்கு 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார்.இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகளவில் தண்ணீர் தேக்க, அதிகாரிகள் அனுமதியுடன் மண் எடுப்பதாக கூறினர்.இதையடுத்து, காரில் ஏறி புறப்படத் தயாரான ஒன்றிய செயலரை அங்கிருந்தவர்கள் வழிமறித்தனர். காரிலிருந்து வெளியே வந்த ஒன்றிய செயலர், காரை வழி மறித்தவர்களை புகைப்படம் எடுத்தார். பொதுமக்களும் அவரை புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ