உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார்

சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார்

சென்னை: திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பலமுறை சர்ச்சை கருத்துகளால் சிக்கலில் மாட்டிக்கொள்பவர். நடிகை குஷ்பு குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். லோக்சபா தேர்தலின்போது பிரசார மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பா.ஜ., வேட்பாளருமான ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.இது தொடர்பான வீடியோ தற்போது வைரலான நிலையில் சமூக வலைதளத்தில் ராதிகா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MADHAVAN
மே 21, 2024 11:38

ராதிகா அப்பா பேசாத பேச்சா ? இல்ல அவருடைய அண்ணன் ராதாரவி பேசாத பேச்சா ?


vee srikanth
மே 17, 2024 15:17

இவர் என்ன சவுக்கு சங்கரா ?


V. Kanagaraj
மே 17, 2024 14:08

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டதாக பத்திரிக்கைகளில் மற்றும் பிற செய்தி ஊடகங்களிலும் செய்தி வந்து பரபரப்பாக பேசப்பட்டது திமுக அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நினைவில்லை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எப்போதுமே அப்படிதான் பேசுவார் அவர்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைப்பது நடக்க போவதில்லை


Muralidharan raghavan
மே 17, 2024 11:21

ஆபாசமாக பேசுவது என்பது திமுகவினருக்கு அண்ணாதுரை காலத்தில் இருந்தே உள்ள விஷயம் கருணாநிதி , வண்ணை ஸ்டெல்லா என பலரும் பேசி உள்ளார்கள்


கத்தரிக்காய் வியாபாரி
மே 16, 2024 20:29

வீட்டை இடிக்க வேண்டும்


HoneyBee
மே 16, 2024 18:58

திமுக சொம்பு/கைதுசெய்ய மாட்டார்கள் விலக்கிவிட்டு மீண்டும் கொஞ்ச நாள் கழித்து சேர்த்து கொள்வார்கள் இதுதாண் திராவிட மாடல்


G Mahalingam
மே 16, 2024 18:38

திமுக ஆட்சியில் திமுகவினர் மீது நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அதுவும் ஜாமீனில் வந்து விடுவார்கள்


UTHAMAN
மே 16, 2024 17:36

இப்போது எவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண் காவலர்களுக்கு மன உளைச்சல், ரோஷம் வராதே இவரது கைகளையும் உடைத்து காவல்துறை முதற்கட்ட நீதி வழங்காதே அந்த பயம் இருக்கட்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை