உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்

திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=605ffsg9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெற்று விளம்பரம்

மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது? வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில கேள்விகள். டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?

பதில் என்ன?

பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. தமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது.

நடவடிக்கை

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

கனோஜ் ஆங்ரே
நவ 14, 2025 11:28

வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி....?


தலைவன்
நவ 07, 2025 16:48

அத்தனை மலர்களில் தாமரையும் இல்லை அதனால் வெற்றி வாகையும் இல்லை ??? இருண்ட உலகத்தின் ஒரே வெளிச்சம் சூரியன் மட்டுமே???


Ramesh Sargam
நவ 03, 2025 02:13

அனுப்புவது என்று முடிவு எடுத்தபின், குடும்பத்தோடு அனுப்பவும்.


Natchimuthu Chithiraisamy
அக் 30, 2025 13:41

அதற்க்கு தேவை அதிமுக பிஜேபி கூட்டணி. தனியாக எதுவும் செய்ய முடியாது. 41 பேருக்கு 20 கோடி கொடுத்தது போல் அனைவருக்கும் கொடுக்க முடியமா? பணத்தால் பாவத்தை துடைக்க முடியாது. 41 குடும்பத்தை மட்டும் காப்பாற்றுவது மன்னிப்பு கேட்பது எப்படி சரியாகும். கூட்டத்திக்கு வந்த 15000 பேரும் பல இன்னல்கள் பட்டிருப்பார்கள் அவர்களுக்கும் ஆறுதல்கள் வேண்டும். சில பேருக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் எப்படி கேட்பார்கள். இறந்த குடும்பத்தின் இழப்பு அவர்களுக்கு யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் இரு 20 வயதுள்ள பெண்கள் இறந்து விட்டார்கள் பணம் அந்த தாய் தந்தையை ஈடுசெய்யாது.


pakalavan
அக் 30, 2025 12:02

கூட்டத்துக்கு வந்தவங்களை முழுசா வீட்டுக்கு அனுப்பு


Padmasridharan
அக் 30, 2025 07:22

கேள்விகள் எல்லாருமே கேட்பாங்க சாமி. பதில்கள விஜயம் கண்ட கட்சி செய்யுமா. சரியான நேரத்திற்கு வந்திருந்தா மனிதக்கொலைகள் நடந்திருக்குமா. Punctuality என்ன ஆச்சு அவரு 10 லட்சம் கொடுத்தார்னு இவரு 20 லட்சம் கொடுத்தது superior கெத்து காண்பிக்கவா. செத்தவங்களோட பின்னணி தெரியாமலேயே பல கட்சிகள் ஏன் செத்தவங்களுக்கு பணத்தை கொடுக்கறாங்க. படிச்சவங்க கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாதே, இப்படி செத்தா நல்லா இருக்கும்னு தோணறதுக்காகவா .


Anbarasu K
அக் 29, 2025 09:46

எப்போ இன்னு சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்


Anbarasu K
அக் 29, 2025 06:48

நம்பிட்டோம் ஐயா பிறகு என்ன செய்ய போறீங்க


ராஜா
அக் 29, 2025 04:19

41 பேரோடு கதையை முடித்து வைத்து விட்டு அடுத்த படத்தில் நடிக்க போகும் வீர்ரை வாழ்த்துவோம் உங்களுக்கு என்ன வீரம்


கொங்கு தமிழன் பிரசாந்த்
அக் 28, 2025 23:16

ஃபர்ஸ்ட் நீ வீட்டுக்கு வெளிய வா அப்புறம் பேசலாம்.


புதிய வீடியோ