தி.மு.க., அரியணை ஏறப்போவதில்லை
தினமும் பெண்கள் காமக் கொடூரர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் வேளையில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' என நாடகம் நடத்தி, விளம்பரம் தேடியதை மறக்க முடியுமா?போதையின் பாதையில் இளைஞர்கள் சீரழியும்போது, போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதை விட்டு, மேடையில் மட்டும் பாடம் எடுத்த கோரத்தை மறக்க முடியுமா? கொடுத்த வாக்குறுதியை பறக்கவிட்டுவிட்டு, பகுதி நேர ஆசிரியர் கண்ணனின் உயிரைப் பறித்த கொடூரத்தை தான் மறக்க முடியுமா? இன்னும் எவ்வளவு கதறினாலும், தி.மு.க., இனியொரு முறை அரியணை ஏறப்போவதில்லை. - நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,