தேசிய வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமின்றி, வேலை நாட்களையும் மத்திய பா.ஜ., அரசு குறைத்துள்ளது. தமிழகத்தின் 12,253 கிராம ஊராட்சிகளில் காங்., ஆட்சியின்போது, ௧ லட்சத்து 25,000 கோடி ரூபாய் அளவுக்கு, தேசிய வேலை உறுதித்திட்ட பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் வந்த பா.ஜ., ஆட்சியில், 65,000 கோடி ரூபாய், 42,000 கோடி ரூபாய், தற்போது 16 கோடி ரூபாய் என, வெகுவாக நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டனர். வரும் காலங்களில் 10ல் இரண்டு பேருக்கு தான் வேலை வழங்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். தன் மீது ஊழல் வழக்கு எதுவும் பதியக்கூடாது என்பதற்காக, பா.ஜ.,வுடன் பழனிசாமி கைகோர்த்துள்ளார். ஆனால், மத்திய அரசின் ஏஜன்சிகள், தி.மு.க., மீது எத்தனை வழக்குகளை போட்டாலும், கட்சியினர் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். - பெரியசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,