கோவை: கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில், தி.மு.க., சாதனைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம், ராஜ வீதி தேர்நிலை திடலில் நடந்தது.கட்சியின் துணை பொது செயலர் ஆ.ராஜா பேசியதாவது: ஆட்சியிலும், கட்சியிலும் சரியாக உழைத்து, உச்சத்துக்கு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். முந்தைய ஆட்சியாளர்கள், 5 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டு சென்றனர். அந்த கடனிலும், கொரோனா சமயத்தில் பெற்றோரை உயிரிழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை என, பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க., அரசு வழங்கியது.மொழி தேசியமாகும்; மதம் தேசியமாகாது. இன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., என முக்கிய துறைகளில், பிராமணர்கள் தான் இருக்கின்றனர். காரணம், அதிகாரம். அதிகாரம் அவ்வளவு வலிமையானது.தேர்தல் பத்திரம் வாயிலாக, பல கோடி ரூபாய் வாங்கி, பா.ஜ., ஊழல் செய்துள்ளது. தி.மு.க., இருக்காது என்று மோடி பேசியுள்ளார். வரும் தேர்தலில் தி.மு.க., - எம்.பி.,க் கள், 40 பேர் சென்று பார்லிமென்டை மாற்றிஅமைத்தவுடன், மோடி சிறைக்கு செல்வார். இவ்வாறு அவர் பேசினார்.