உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு

 பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு

சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க., பல்வேறு மாநாடுகளை நடத்தி வருகிறது. கடந்த 14ம் தேதி திருவண்ணாமலையில், வடக்கு மண்டல தி.மு.க., இளைஞரணி மாநாடு நடந்தது. அதைத் தொடர்ந்து பல்லடத்தில் இன்று தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடக்கிறது. தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் நடக்கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தி.மு.க., கட்சி ரீதியான 13 மாவட்டங்களில் உள்ள 39 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 1.50 லட்சம் பெண்கள், மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை