உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு சதவீதம் குறைந்தாலும் அனைத்து தொகுதிகளையும் அப்படியே அள்ளிய திமுக

ஓட்டு சதவீதம் குறைந்தாலும் அனைத்து தொகுதிகளையும் அப்படியே அள்ளிய திமுக

சென்னை: கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த முறை திமுகவின் ஓட்டு சதவீதம் 26.93 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணியில், 2019 தேர்தலில் 23 இடங்களில் களம் இறங்கிய தி.மு.க., 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது. இந்த முறை தேர்தலில், தி.மு.க., 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது; அதன் ஓட்டுகளும் குறைந்துள்ளன. இந்த முறை திமுகவின் ஓட்டு சதவீதம் குறைந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், அ.தி.மு.க., 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை, ஓட்டு சதவீதம் திமுக கூட்டணிக்கு குறைந்துள்ளது. இது திமுக ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் அதிருப்தியையே காட்டுகிறது என சமூகவலைதளத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் 40 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அனைத்து தொகுதி மக்களுக்கும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
ஜூன் 05, 2024 22:33

தவழ்ந்தபாடி அகம்பாவம் தீய திமுக வை ஜெயிக்க வைத்து விட்டது. 2026 பாஜக ஆட்சி தமிழகத்தில் மலரும்.


Ashok Subramaniam
ஜூன் 05, 2024 21:36

கருத்துக் கணிப்பெல்லாம் வெத்து கணக்குதான்னு இப்போவாவது புரிஞ்சா சரி


Ramesh Sargam
ஜூன் 05, 2024 20:29

இந்த வெற்றி டாஸ்மாக்குக்கு கிடைத்தவெற்றி. திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல.


ThamizhMagan
ஜூன் 05, 2024 18:55

"தலை குப்புற விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை " - :- :-


R Hariharan
ஜூன் 05, 2024 18:01

ஜால்ரா...கருத்து கணிப்பில் பிஜேபி கூட்டணி அமோக வெற்றி பெரும் என்றும் நான்கு அல்லது ஐந்து இடம் தமிழ் நாட்டில் வரும் என்றும் சொன்னீர்கள்.கருத்து கணிப்பு சுத்த வேஸ்ட். எந்த அடிப்படையில் எடுக்கிறீர்கள்


R Hariharan
ஜூன் 05, 2024 18:01

கருது கணிப்பில் பிஜேபி கூட்டணி அமோக வெற்றி பெரும் என்றும் பிஜேபி நன்கு அல்லது ஐந்து செஅட் தமிழ் நாட்டில் வரும் என்றும் சொன்னேர்கள் கறுத்து கருது செத்த வேஸ்ட் எந்த அடிப்படையில் கருது edukireekal


கனோஜ் ஆங்ரே
ஜூன் 05, 2024 17:08

தோத்தாச்சு... அப்புறம் என்ன ஆராய்ச்சி...? ஒரே ஒரு ஓட்டில் ஜெயிச்சாகூட அது வெற்றிதானே...? ஒரே ஒரு ஓட்டில் ஜெயிச்சா, அது நீ எம்.பி., இல்லென்னு அரசியலமைப்புச் சட்டமோ, இந்திய தேர்தல் ஆணையமோ சொல்லலையே....?


Siva Subramaniam
ஜூன் 05, 2024 16:26

Money has paid substantial role, else, NOT one seat for DMK.


J.V. Iyer
ஜூன் 05, 2024 15:54

ஓட்டுக்களை எப்படி அள்ளுவது என்று திமுகவுக்கு அத்துப்படி. மேலும் எதிர்க்கட்சிகளின் தவறுகளால் இது சுலபமாக போய்விட்டது.


Kumar
ஜூன் 05, 2024 15:53

நாம் தமிழர் கட்சி போல தனித்து நின்றால் டெபாஸிட் கூட வாங்க முடியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை