உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=milq6ytd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருவாரூர் நாச்சியார் கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று (பிப்.,20) நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* பொது இடங்களில் சிலை, கட்சிக்கொடி வைப்பதை ஏற்க முடியாது.* தலைவர்கள் சிலை, கொடிகளை கட்சி அலுவலகம் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டியது தானே? * எந்த கட்சியாக, எந்த இயக்கமாக இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது.* அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, வாபஸ் பெற உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Ganapathy Subramanian
பிப் 21, 2025 11:38

இந்த தீர்ப்பை முன்னோடியாக வைத்து ராமசாமி நாயக்கரின் சிலையை அகற்ற வழக்கு தொடரலாமா? இல்லை அரசாணை பிறப்பித்து அதை பாதுகாக்க முடியுமா?


எவர்கிங்
பிப் 21, 2025 01:32

திருவரங்கத்து ....சிலையையும் கட்சி அலுவலகத்துக்கே அனுப்புங்க


W W
பிப் 20, 2025 21:55

அவர் அவர் கட்சி அலுவலகத்தில் வைக்கலாம், டிராபிக்கு இடைஞசலக இருக்கும் குண்டு அமைப்பதெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்.அப்படியில்லயால் , அல்லது அவரவர் சொந்தமான ரீசோட்டில் அல்லது பார்ம் அவுசில் வைக்கலாம், யாருக்கும் இடைஞ்சல் இல்லை.


Ramesh Sargam
பிப் 20, 2025 21:29

நாம் பல வீட்டு வாசல்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கிற போர்டு பார்த்திருப்போம். அதுபோல இந்த அரசியல்வாதிகளின் சிலைகளும். என்ன திருடர்கள் ஜாக்கிரதை என்கிற போர்டு இல்லை. அவ்வளவுதான். ஆனால் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


Karthik
பிப் 21, 2025 10:19

சரியாக சொன்னீர்கள். அதாகப்பட்டது.. பொதுஇடத்தில் ஒரு சிலையை அல்லது கட்சிக் கொடியை பார்த்தால் அந்த ஏரியா முழுவதும் அந்த ""தலைவரின் சிஷ்ய பிள்ளைகள் களப் பயிற்சியில் உள்ளனர் ஜாக்கிரதை"" என்று. தமிழகமெங்கும் இதை ஊர் எல்லை / வீதியின் தொடக்கம் / முச்சந்தி / நால் ரோடு / மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களில் பார்க்கலாம். பார்ப்போர் ஜாக்கிரதை..


M Ramachandran
பிப் 20, 2025 20:17

அப்போ ஸ்ரீரங்கம் கோவில் எதிர்தாபோலுள்ள தாடிக்காரரின் சிலையை தலையில் காக்க எச்சமிடாமால் பழைய தினத்தந்தி ஆபீசில் பத்திரமாக வைக்க விடியல் அரசால் முடிவு எதிர்பார்க்கலாம்.


பேசும் தமிழன்
பிப் 20, 2025 19:14

திமுக கட்சிக்கு மட்டும் விதி விலக்கு உண்டா ???.... அவர்கள் ஆளுங்கட்சி.... அவர்கள் விரும்பிய இடத்தில் சிலை மற்றும் கொடி கம்பம் வைத்து கொள்ளலாமா ???


suresh kumar
பிப் 20, 2025 18:17

இது தி.மு.க விற்கும் பொருந்துமா? ஏனென்றால் இன்று தமிழகத்தில் வீதிகள் தோறும் இவர்கள் தான் சிலைகள் அதிகம் வைக்கின்றனர். ஏழை எளியோருக்கு செலவு செய்ய நிதி இல்லை என்று கூறிவிட்டு இவர்கள் கலைஞரை கொண்டாடுவது யார் வீட்டு நிதியில் என்று ஆதாரத்தோடு முன்வைத்து செலவுகளை மக்களிடம் கூறுவார்களா?


SIVA
பிப் 20, 2025 17:53

மனசாட்சி இருந்தால் மெரினா பீச் பற்றி பேசுங்கள் அது இப்பவெய் சமாதி மாதிரி தான் இருக்கு ....


கடல் நண்டு
பிப் 20, 2025 16:59

ராமசாமி சிலை கோயிலின் முன்பு தேவையற்ற வாசகத்துடன் இருப்பது எப்போது தான் இந்த ஆபீசர்களின் அறிவுக்கு எட்டுமோ ??? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..


கல்யாணராமன்
பிப் 20, 2025 16:19

பொது இடங்களில் உள்ள அனைத்து சிலைகள் கொடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


புதிய வீடியோ