வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீ என்ன அப்பா டக்கர் மாதிரி பேசற?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வராகும் கனவில் இருக்கிறார். அவர், நேரடி தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆனதில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் வந்த தொடர் நிகழ்வாகத்தான், பழனிசாமி முதல்வர் ஆனார். அதற்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பழனிசாமி மற்றும் அவருடைய கட்சியினர் தோல்வியை சந்தித்துள்ளனர். அதனால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை.போலீசார் மத்தியில் இன்னும் ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது. அதை உறுதிபடுத்துவது போலத்தான், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அடித்தே கொல்லப்பட்டது.எல்லா ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் நடக்கத்தான் செய்கின்றன. மக்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து, போலீசாருக்கு முறையாக வகுப்பெடுக்க வேண்டும். - கார்த்தி, காங்., - எம்.பி.,
நீ என்ன அப்பா டக்கர் மாதிரி பேசற?