உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து பயம் வேண்டாம்: தேர்தல் ஆணையம் பதில்

சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து பயம் வேண்டாம்: தேர்தல் ஆணையம் பதில்

சென்னை :'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பயம் வேண்டாம்; அனாவசியமாக யார் பெயரும் நீக்கப்படாது. எதிர்பார்த்ததை விட சிறப்பாக திருத்தப் பணி மேற்கொள்ளப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - பி.சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு: தி.நகர் சட்டசபை தொகுதியில், 1998ம் ஆண்டு, 2 லட்சத்து 8,349 வாக்காளர்கள் இருந்தனர். 2021ல் வெறும் 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்து உள்ளனர். அதாவது, 17.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. மக்கள்தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

13,000 பேர் நீக்கம்

தி.நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஆதரவாளர்கள் 13,000 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இறந்தவர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப்படவில்லை. இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, தவறான சேர்க்கை மற்றும் நீக்கத்தை களைய வேண்டும். இப்பணிகளை விரைவாக முடித்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அதேபோல, தாம்பரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என, அ.தி.மு.க., வழக்கறிஞர் விநாயகமும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜனவரி மாதமும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடத்தப்படும். தற்போது தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வது தொடர்பாக, அக்., 27ல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் துவங்க உள்ளன. இப்பணிகளில் வாக்காளர் பட்டியல் முழுமையாக மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து, டிசம்பர் மாதம் 9ம் தேதி, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது, வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பாக நடக்கும்

மேலும், 1950ம் ஆண்டுக்கு பின், 10 முறை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டை தொடர்ந்து, 20 ஆண்டு களுக்கு பின், சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து, யாரும் பயப்பட தேவையில்லை; அனாவசியமாக யார் பெயரும் நீக்கப்படாது. இப்பணிகள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்யப்படும். அனைத்து பணிகளும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும். இவ்வாறு அவர் வாதாடினார். இதேபோல, கரூர் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும், வரும் 13ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
நவ 04, 2025 21:33

கலவரமான திமுக பூத் ஏஜெண்ட்களின் முகம். என்னது..முன்பு போல இனிமே செத்துப் போன ஆட்களின் ஓட்டைப் போடவே முடியாதா? எங்க பிழைப்பில் மண்.


சிந்தனை
நவ 04, 2025 19:47

இதுபோன்ற தகுதியற்ற வழக்குகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்வது நியாயமாக தெரியவில்லை. வழக்கு தொடுத்தவர்களிடமே வசூல் செய்வது சரியாக இருக்கும் மக்களின் உணர்வுகளையும் பணத்தையும் மதிப்பது அரசின் கடமை என்று தோன்றுகிறது


Pandianpillai Pandi
நவ 04, 2025 18:43

சிறப்பு சீர்திருத்தம் சிறப்புற வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு செய்யலாமே மக்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். தமிழக மக்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பவர்கள். தேர்தல் ஆணையம் பயப்படவோ பதற்றப்படவோ வேண்டாம் . சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்களிக்கக்கூட மக்களை தகுதியற்றவர்களாக்கிவிடாதீர். போதுமான அவகாசம் மக்களுக்கு இல்லை. எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்வோம் என்று கூறுவதில் சூட்சுமம் இருக்கிறது. சூட்சுமம் ஏதேனும் ஆணையம் செய்தால் அதை மக்கள் இம்முறை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். குளறுபடி நடந்தேறினால் போராட்டம் மிக பெரிய அளவில் வெடிக்கும்.


Madras Madra
நவ 04, 2025 11:31

உங்களுக்கு என்ன நீங்க சொல்லிட்டீங்க எங்க பயம் எங்களுக்குத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கிய பட்டியல் அதை ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி திருத்தம் செய்வேன்னு மனிதாபிமானம் இல்லாமல் சொல்லுவது ஆரிய சதி சிறுபான்மையினர் மேலே ஏவி விடப்பட்ட சனாதன சூழ்ச்சி


பாமரன்
நவ 04, 2025 10:00

ஒரு காமெடி கூட்டம் இருக்கு... இங்கேயும் கூட...


vivek
நவ 04, 2025 11:49

என்ன செய்ய...உன்னை போல சில திராவிட அறிவிலி கூட்டமும் இருக்கே.....


VENKATASUBRAMANIAN
நவ 04, 2025 07:58

வரைவு பட்டியல் தரும் போது விண்ணப்பிக்கலாம்


rama adhavan
நவ 04, 2025 06:37

தற்போது அமெரிக்கா போன்ற வெளிநாட்டிற்கு சுற்றுலா விசாவில் இருக்கும் டிசம்பர் 25க்கு பின் தமிழ்நாடு வரும் தமிழ்நாட்டு வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்க என்ன செய்வது?


visu
நவ 04, 2025 15:32

எத்தனி பேர் அமெரிக்காவில் சுற்றுலாவில் இருக்கிறாரார்கள் ஒரு 200 பேர் இருப்பார்களா அவர்கள் நேரில் போய் கேட்டல் முடியாது என்றா சொல்லிவிட போகிறார்கள் அதைவிட முக்கியம் லட்சக்கணக்கான வங்கதேசிகள் இங்க ஓட்டுரிமை பெறுவதை தடுக்க வேண்டியது


Palanisamy Sekar
நவ 04, 2025 05:41

என்றைக்கு திமுக இந்த நாட்டில் தோன்றியதோ அன்றே இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய கேவலங்களுக்கும் அந்த கட்சியே காரணமாக இருக்கிறது. பேச்சில் மயங்கிய மக்கள் அவர்களை தேர்தலில் வெற்றிபெற வைத்தனர் என்றால் அது 1970 களில் நடந்த ஒன்று, அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு எதிராக வாக்களிப்போரையெல்லாம் நீக்கிவிட்டு புதிதாக வாக்காளர்களை சேர்த்துக்கொள்ள உதவின. இறந்தார்கள் பெயர்களையும் நீக்காமல் விட்டுவைத்தனர். பூத்களில் சாப்பாடு நேரத்துக்கும் சரியான வெய்யில் நேரத்தை பார்த்து இறந்தவர்கள் பெயரில் யாரையாவது அனுப்பி விவரங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து இளைஞர்களை அனுப்பிவைக்கும். அதற்கு பரிசாக சாராயத்தையும் பிரியாணியையும் கொடுக்க வைப்பார்கள் திமுகவின் வேட்பாளர்கள். அபப்டியே சுமார் 10000 ஓட்டுக்கள் வரையில் அவர்கள் கள்ள ஓட்டுப்போட வைப்பார்கள். இப்போதுகூட ஸ்டாலின் தொகுதியில் சுமார் 14,000 கள்ள வாக்காளர்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். மாற்றுக்கட்சி பூத் ஏஜெண்டுகளுக்கு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு சன்மாமனும் கொடுத்த கொடுமையெல்லாம் கூட உண்டு. தேர்தல் ஆணையம் திமுகவின் தில்லுமுல்லுகளை கண்டுபிடிக்கவே இன்னும் நூறு ஆண்டுகள் ஆகிடும். ஜனங்களும் திருந்தப்போவதில்லை. ஆட்சிக்கு வருவோரும் திருந்தவே மாட்டார்கள். ஆக தேர்தல் திருவிழாவில் ஏமாற்றுப்பேர்வழிகளுக்குத்தான் மரியாதை என்பது தொடரும். கோர்ட் தீர்ப்பு என்பதல்லாம் ஒருவித ஆடல் பாடல் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.


Kasimani Baskaran
நவ 04, 2025 03:53

கள்ளவோட்டு போடவோ அல்லது வாக்காளர்களை ஏமாற்றி வாக்கு வாங்குவதோ ஒருவகை திராவிட சூத்திர தொழில் நுணுக்கம். வாக்குச்சாவடி மூடுவதற்கு முன் திடீர் என்று கூட்டம் வரும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட வாக்களிப்பார்கள். இப்பொழுது கள்ளவோட்டுக்கு பதிலாக வங்கதேசத்தவர்களை களமிறக்கி இருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை தீவிரமாக சரிபார்த்தால் அவர்களை கண்டிப்பாக நீக்கவேண்டியது வரும்.


தாமரை மலர்கிறது
நவ 04, 2025 03:03

இறந்தவர்கள், வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை தமிழர்கள், பங்களாதேஷிகள், ரோஹிங்யா முஸ்லிம்கள் என்று ரெண்டுகோடி கள்ளஓட்டுக்களை ஓட்டர் லிஸ்டிலிருந்து தூக்க வேண்டும். அப்போது தான் திருட்டு திராவிட ஆட்சி ஒழியும். தமிழகத்தை உயர்த்த, கடுமையாக உழைத்துவரும் ரெண்டு கோடி வடஇந்தியர்க்ளுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டும். அவர்கள் இங்கு தான் வாழ்கிறார்கள். ஓட்டுபோடுவதற்காக அவர்கள் பீகார் போகமுடியாது. விரைவில் பிஜேபி ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்.


Indian
நவ 04, 2025 16:01

ரோஹிங்கியா தான்


புதிய வீடியோ