உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்

வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நலம் குறித்த யூகங்கள் மற்றும் அதன் உண் மைகள் குறித்து விளக்கம் விக்கும், 'நலந்தானா, நம் கையில்' என்ற நிகழ்ச்சி, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சென்னை ஆரோக்யா சித்த மருத்துவமனை மூத்த மருத்துவர் கு.சிவராமன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: மருத்துவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் யூகத்தின் அடிப்படையில் அதிகமான கருத் துக்கள் பரவுகிறது. சமூக ஊடகத்தில் தகவல் தேடுவது தவறல்ல; ஆனால் அதில் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதா, சரியானதா என்று பார்க்க வேண்டும். அறிவு என்பது வேறு, தகவல் என்பது வேறு. மருத்துவம் தொடர்பான தவறான தகவல்கள் வேகமாக பரவுவதால் சிக்கலை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசி பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற் படுத்துகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவறான தகவலை பரப்பினர். ஆனால், நீதிமன்றம் அனுமதி அளித்ததால், குறைந்த செலவில் புற்றுநோய் மருந்து கிடைக்கிறது. அரசியல் ரீதியாக தவறான தகவல் பரப்பினால் கடந்து போய்விடலாம். ஆனால் மருத்துவம் தொடர்பாக தகவல்கள் அப்படியல்ல, அவற்றை நம்புவதால் தவறுகள் நடக்கிறது. மருத்துவ துறை சார்ந்து சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் அதிக பிழைகள் மண்டிகிடக்கிறது.ஒருவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு எந்த மருந்து தேவை என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும். தற்போது, கூகுள் மருத்து வர்கள் அதிகரித்து விட்டனர். மருத்துவ துறை பற்றி கூகுளில் தேடும் எல்லா தகவல்களையும் நம்பாதீர்கள். இவ்வாறு சிவராமன் பேசினார்.அதை தொடர்ந்து, நீரிழிவு நோய் நம்பிக்கையும், நிஜங்களும் என்ற தலைப்பில், சென்னை செந்தூர் நீரிழிவு சிகிச்சை மருத்துவமனை டாக்டர் சண்முகம், பெண் ஆரோக்கியம் குறித்து சென்னை மித்ராஸ் பவுண்டேசன் டாக்டர் அமுதாஹரி, திருப்பூர், வாழ்வியல் நோய் சிகிச்சையில் ஆயுர்வேதம் என்ற தலைப்பில், முத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சுடர்கொடி ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

டாக்டர் ஜான்
ஜூலை 06, 2025 15:52

தீவிர உருட்டு இவர். இவரை நம்பி ஏமாற கூடாது. விளம்பர விரும்பி.


KRISHNAN R
ஜூலை 06, 2025 15:52

இவர் சொல்வதும்..அறிவுரைகள் சேர்த்து தானே..


Anantharaman Srinivasan
ஜூலை 06, 2025 15:42

படிக்காத பரம்பரை சித்த மருத்துவர்களும் நாட்டில் கலந்திருக்கின்றனர். சித்த வைத்தியம் எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை. ஆயுர்வேதம் Best. No side effects.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 06, 2025 15:33

நேத்திக்கு விழுப்புரத்தில் கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்ததும் ஒரு மருத்துவ தகவல்தான். அதையும் நம்பக்கூடாது என்று சொல்கிறீர்களா ?


Iyer
ஜூலை 06, 2025 14:57

இவர் "வலைத்தளங்களில் வரும் மருத்துவ தகவல்கள்" - என்று பொதுவாக கூறி விட்டுவிட்டார். குறிப்பாக ஏதாவது பொய் தகவல் பற்றி கூறி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 17:02

இவரது அணுகுமுறை சரியே ....


Kalyan Singapore
ஜூலை 06, 2025 14:17

புற்று நோய்க்கு குறைந்த செலவில் மருந்து தர வேண்டும் என்று தீர்ப்பளித்த அதே நீதி மன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளை விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய மருத்துவர் சங்கம் அளித்த புகாரை விசாரித்து தீர்ப்பளித்தது. இன்று Covid தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த தகவல்கள் உலகெங்கும் பரவியுள்ளது. சித்த மருத்துவத்தின் ஆதாரமான நூல்கள் எவை? ஆயுர்வேதத்துக்கு அஷ்டாங்க ஹ்ருதயம் போல அவை சித்த மருத்துவர்களுக்கு முறையாக கற்பிக்கப்படுகின்றனவா? இதிலெல்லாம் பல குளறுபடிகள் உள்ளதால் தான் மக்கள் மேற்கத்திய மருத்துவ முறைகளையே அணுகுகின்றனர்


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 13:48

பெரும்பாலும் சமூக ஊடகங்களை தான் நம்புகிறார்கள்.இதை தடுப்பதற்க்கு வாய்ப்பு உண்டா.


Padmasridharan
ஜூலை 06, 2025 12:10

HIV/AIDS க்கு மருந்து உண்டா சாமி. Diabetes க்கு எந்தவிதமான சாப்பிட்டு வகைகள் சாப்பிட வேண்டும் / தவிர்க்க வேண்டும். Sugar free ts விற்பனை அவசியமா. தெரிவியுங்கள்


nizam
ஜூலை 06, 2025 12:09

தலைமை தாங்கியவர் ஸ்வீட் கடை காரர்


sridhar
ஜூலை 06, 2025 12:02

WhatsApp மூலம் தினமும் நமக்கு இலவச, தவறான மருத்துவ அட்வைஸ் கிடைத்துக்கொண்டே இருக்கிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை