மேலும் செய்திகள்
மின்சாதனங்களில் கவனம் தேவை
06-Oct-2025
சென்னை: 'வீட்டில் மின்சாரம் இல்லையென்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் வாயிலாக மின்சாரத்தை எடுக்க வேண்டாம்' என, பொது மக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் மழை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீட்டில், 'சுவிட்ச் ஆன்' செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். நீரில் நனைந்த மின் விசிறி, லைட் உட்பட எந்த சாதனத்தையும், மின்சாரம் வந்த உடன் இயக்க வேண்டாம். வீட்டில் மின்சாரம் இல்லை என்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் வாயிலாக மின்சாரம் எடுக்க வேண்டாம். சாலைகளிலும், தெருக்களிலும் மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். மின் சாதனங்கள் சேதம், மின் தடை தொடர்பாக, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநில அளவில், மின் சாதனங்களை தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல, பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைக்குமாறு, பொறியாளர்களை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
06-Oct-2025