உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகனத்தை பின் தொடராதீர்கள்: ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

வாகனத்தை பின் தொடராதீர்கள்: ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மதுரையில் ரசிகர்கள் யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம்,'' என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளார்.கொடைக்கானலில் நடக்கும் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் மதுரைக்கு விமானத்தில் சென்று, கொடைக்கானலுக்கு காரில் செல்ல உள்ளார். இதனையறிந்த ஏராளமான ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் கூடி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ji5e3hah&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். த.வெ.க., கட்சி துவக்கிய பிறகு விஜய் நிருபர்களை சந்திப்பது இது முதல் முறையாகும்.அப்போது விஜய் கூறியதாவது: மதுரை மக்களுக்கு என்னுடைய வணக்கம். எனது வேலைக்காக நான் செல்கிறேன். ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நான் செல்கிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணில், கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன். ஒரு மணி நேரத்தில் நான் என் வேலையை பார்க்க போகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். மதுரையில் என்னுடைய வேன், கார் பின்னாடி யாரும் பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, ஹெல்மெட் இல்லாமல் செல்வது, டூவீலர் மேல் நின்று பயணிப்பது போன்று வராதீர்கள். இதனை பார்ப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதனை சொல்ல முடியாது. சூழ்நிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. இவ்வாறு விஜய் கூறினார்.மதுரையில் வரவேற்புமதுரை சென்ற நடிகர் விஜய்க்கு, விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் வந்தார். அவர் மீது தொண்டர்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார். சொல் பேச்சு கேட்காத ரசிகர்கள்விஜய்யின் வருகையின் போது, மதுரை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க.,வினர் மற்றும் ரசிகர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. மேலும், விஜய்யின் வேண்டுகோளை நிராகரித்து, கொடைக்கானல் செல்லும் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
மே 02, 2025 05:19

நல்ல அறிவுரைதான். இவருடைய கையெழுத்திட்ட தலைக்கவசம் இலவசமாக கொடுத்தால் இரு சக்கர பயணியர்கள் உபயோகிப்பார்களோ என்னவோ


Ramesh Sargam
மே 01, 2025 20:42

அப்பா, அம்மாவிடம் சண்டைபோட்டு பணம் வாங்கி என்னுடைய படங்களை பார்க்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினால் சந்தோஷம்.


mynadu
மே 01, 2025 19:28

இப்படி சொன்ன தானே விசில் அடிச்சான் குஞ்சிகள் அப்படி வருவாங்க. இவர் போறது நடிக்க அப்போ அதை ஏன் பத்திரிகை மற்ற ஊடகங்கள் சொல்லணும் இதே இவர் எல்லா நேரமும் திரிஷா கீற்தி லண்டன் போகும் போது சொல்லிகிட்டேவா போறார். இப்படி சென்னா தான் மதுரைல மக்கள் கூடுவாங்க என்ற பப்ளிசிட்டி.


HoneyBee
மே 01, 2025 16:00

இதைச் சொல்லவும் ஒரு தகுதி வேண்டும். குடிச்சிட்டு கவுந்து படுத்துட்டு மத்தவகளுக்கு அட்வைஸ்


புதிய வீடியோ