ஏழை மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்
ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவ மனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்றவற்றில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இல்லை என, மக்கள் புலம்புகின்றனர். காங்கேயம், கும்பகோணம், திருவள்ளூர் என பல இடங்களில் போதிய டாக்டர்கள் இல்லாமல் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தேசிய நல்வாழ்வு திட்டம், மாவட்ட சுகாதார சங்கம் வாயிலாக, தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பும் பணி இடங்களை, நிரந்தர பணியாளர்களாக தி.மு.க., அரசு கணக்கிடுகிறது. நவ., 21ல், 1,100 டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆனால், சுகாதார துறையில் காலிப்பணியிடமே இல்லை என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். மீதமுள் ள ஐந்து மாதங்களிலாவது, அரசு மருத்துவமனைகளை நம்பி இருக்கும் ஏழை மக்களின் உயிரோடு தி.மு.க., அரசு விளையாட வேண்டாம். - விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,