வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உயர்ந்த நோக்கம் கொண்ட அறிவுரை வரவேற்கிறேன்
சென்னை: ''பட்டாடை அணிந்து, குழந்தைகள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம்; பட்டாசு வெடிக்கும் போது, 'செல்பி' எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தீபாவளி முன்னெச்சரிக்கையாக, 25 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:தீபாவளி சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவில், ஆண்களுக்கு 12; பெண்களுக்கு எட்டு; குழந்தைகளுக்கு ஐந்து படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதியோர், குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.அதேபோல, செல்லப் பிராணிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசு பற்ற வைக்கும் போது, குனிந்து முகம் அருகில் இருக்கும் வகையில் கொளுத்தக் கூடாது.வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து, பிரித்து பார்க்கக்கூடாது. பட்டாசில் உள்ள மருந்தை எடுத்து, தனியாக பற்ற வைப்பது கூடாது; அதிக பட்டாசுகள் குவிந்திருக்கும் பகுதியில் வெடிக்கக் கூடாது. கால் சட்டை பையில் பட்டாசுவைத்துக் கொண்டு, இன்னொரு பட்டாசு வெடிக்கக் கூடாது.பெரியவர்கள் இருக்கும் போது மட்டுமே, குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். பட்டாடைகள் அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது; வெடிக்கும் போது, 'செல்பி' எடுக்கக் கூடாது. காலில் செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
'கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், தனியார் மயமாக்கப்படும்' என, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு சிகிச்சை பெறும் 520 பேருக்கு, காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. சமூக பொறுப்பு நிதி வாயிலாக, அனைத்து மருத்துவமனைகளையும் மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த மருத்துவமனையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை, தனியார் மயமாக்கல் என்று கூறக்கூடாது. இந்த மருத்துவமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது; தன்னார்வலர்களுக்கும் தத்து கொடுக்கப்படாது.- சுப்பிரமணியன், அமைச்சர்
உயர்ந்த நோக்கம் கொண்ட அறிவுரை வரவேற்கிறேன்