உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா: கவர்னர் கேள்வி

துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா: கவர்னர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா?'' என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்கள் போலீசார் மூலம் மிரட்டப்பட்டதாக கவர்னர் ரவி குற்றம்சாட்டி இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y6sm5f67&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'முதல்வர் ஸ்டாலின் போலீசாரைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரநிலை நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார். மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்! இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?. இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Oviya Vijay
ஏப் 26, 2025 14:58

வாங்குன தீர்ப்போட பலன முழுசா அனுபவிக்க விடாம டெல்லிக்கு நீங்க போயிட்டு வந்து அங்க உங்களுக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி திரும்பவும் எல்லாத்தையும் உங்க கண்ட்ரோல்ல கொண்டு வரணும்னு நீங்க நெனச்சா மாநில அரசு ஒத்துக்கிருமுங்களா... என்னங்க ரவி நீங்க பேசுறது... இதுல உங்களுக்கு மாநில அரசோட அதிகார மோதல் இல்லை அப்படின்னு என்னதான் நீங்க பூசி மெழுகினாலும் அது தானே உண்மை... சுப்ரீம் கோர்ட்டுகிட்ட இருந்து இன்னொரு குட்டு வாங்குறதுக்கு முன்னாடி இனிமேலும் டெல்லி சொல்லிக் கொடுக்குற மாதிரி நடந்துக்காம சுயமா சிந்திச்சு செயல்படுங்க... இல்லைன்னா கடைசியில உங்கள மட்டும் மாட்டி விட்டுட்டு (பதவியில இருந்து உங்களை தூக்கிட்டு) டெல்லி தப்பிச்சுக்கும்...


venugopal s
ஏப் 26, 2025 12:21

அதை விடுங்கள், ஆளுநருக்கு தன்னிச்சையாக தமது இஷ்டத்துக்கு செயல்படும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தான் ஏற்கனவே சொல்லி விட்டதே!


pmsamy
ஏப் 26, 2025 06:57

பாஜகவின் அல்லக்கை ஆறன் ரவி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அனுப்பப்பட்டிருக்கிறார்


ManiK
ஏப் 26, 2025 00:21

இது காவல் ஆட்சி இல்லை கவர்னர் ரவிஜி, காவாலி, களவானி ஆட்சி. ஸ்டாலின் செய்லது மிகமிக கேவலம்.


அப்பாவி
ஏப் 25, 2025 22:03

ரிடையராகி வீட்டிற்குப் போகாம இருக்குறவங்க கூட்டம் கூட்டும் போது பதவியில் இருக்குற துணை வேந்தர்களுக்கு வராம இருக்கிறதுக்கு சுதந்திரம இல்லியா?


vivek
ஏப் 26, 2025 10:36

படிப்பறிவு இல்லாத ஜென்மங்கள் கருத்து போடுது


thehindu
ஏப் 25, 2025 21:18

அற்பத்தனமான ஒரு கவர்னர்


vivek
ஏப் 26, 2025 06:14

கேடுகெட்ட திராவிட சொம்பு


S Regurathi Pandian
ஏப் 25, 2025 20:20

தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டபோது எத்தனை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்? அந்த கருத்துக்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது?


S Regurathi Pandian
ஏப் 25, 2025 20:19

இந்தியாவில் தற்போது எந்த துணைவேந்தர் கல்வி சுதந்திரத்தோடு செயல்படுகின்றனர்? ஆளுநர் தலையீடு அரசியல்தான். முதலமைச்சர் தலையீடும் அரசியல்தான். அதிகாரம் யாருக்கு என்று இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதலின் விளைவே இது. துணைவேந்தர்கள் கருத்தைக் கேட்டா கல்விக்கொள்கை தயாரித்தனர்?


S. Venugopal
ஏப் 25, 2025 22:01

கல்வித்துறையின் செயலர், இணை செயலர், துணை செயலர் அவர்களை ஏன் விட்டுவிட்டீர்? இவர்களின் தலையீடுகளும் மிகவும் அதிகம்


GMM
ஏப் 25, 2025 20:12

கருணாநிதி ஆட்சி முதல் போலீஸ் ராஜ்யம் தான். எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் அடக்கத்துடன் போலீஸ் ராஜ்யம். தற்போது உச்ச நிலை? அடுத்து துணை வேந்தர் ஏல மசோதா. அதிக கல்வி கட்டணம் வசூலித்து, அதிக மாணவர்கள் சேர்த்து, அதிக பட்டம் வழங்கும் ஆசான் ஏல தேர்வு செய்ய மசோதாவின் முக்கிய நோக்கம். இந்த மசோதா தனக்கு தானே ஒப்புதல் வழங்கும் முறை.


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2025 19:59

இந்திய அரசியலமைப்புப்படி ஸ்டாலின் வெறும் மேயர் தான். அதற்குள்ள அதிகாரம் போலீஸ் மற்றும் சொத்து வரி கண்ட்ரோல் தான் அவருக்கு உள்ளது. அதை வைத்துக்கொண்டு, ஏதோ வானையே வில்லாக வளைத்துவிடுவது போன்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். துணைவேந்தர்களை மிரட்டுகிறார். அமித் ஷா லத்தியை எடுத்தால், மேயர் ஸ்டாலின் தாங்கமாட்டார் . கெஜ்ரி மாதிரி உள்ளே போக நேரிடும்.


புதிய வீடியோ