உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் படம் வேண்டாம்: ஆனந்த் எச்சரிக்கை

என் படம் வேண்டாம்: ஆனந்த் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகம் துவங்கப் பட்டதும், கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட ஆனந்த்துக்கு, தனக்கு இணையாக முக்கியத்துவம் கொடுக்க விஜய் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஆனந்துக்கும் கட்சியினர் முக்கியத்துவம் அளித்து, பேனர்களில் படம் போட்டனர். 'கட்சி என்றால், நீங்கள் தான் முகம். உங்களை விரும்பித்தான், மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். பொதுச்செயலர் ஆனந்துக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும்' என, விஜயிடம் சிலர் கூறினர். அதையடுத்து, தன் படம், பெயருக்கு மட்டுமே கட்சியினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, திடீர் உத்தரவு போட்டிருந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில் த.வெ.க., நிர்வாகிகளுக்கு, ஆனந்த் அனுப்பிய கடிதம்:

த.வெ.க.,வினருக்கு ஒரே தலைவர் விஜய் மட்டுமே. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து, விஜயை முதல்வராக்குவதே நமது குறிக்கோள். த.வெ.க., நிகழ்ச்சிகள், விளம்பர பேனர்களில், கட்சித் தலைவர் விஜய் படம் மட்டுமே இடம்பெற வேண்டும். எனது படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ