| ADDED : நவ 25, 2024 12:50 PM
சென்னை: அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்போவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை, எனக் குறிப்பிட்டிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yq4ieb59&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, இந்த மனு தொடர்பாக தேர்தல் கமிஷனின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனுவின் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்று கேள்வி எழுப்பினர். அப்போது, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட மனு மீது ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை டிச.,2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.