உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இரட்டைக்கொலை; ஓட ஓட விரட்டி சகோதரர்களை வேட்டையாடிய பயங்கரம்

சென்னையில் இரட்டைக்கொலை; ஓட ஓட விரட்டி சகோதரர்களை வேட்டையாடிய பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவடி அருகே சகோதரர்கள் இருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkatesan Ramasamay
ஜன 19, 2025 10:13

ஓட ..ஓட .. விரட்டி வெட்டி கொலை. விடுங்க சார்.. எத்தனைபேரை இந்த ரௌடிப்பயலுக ஓட .. ஓட .. விரட்டி கொலை செய்திருப்பானுக.. கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல்.. ஆயுதம் ஏந்தியவன் ஆயுததாலேயே சாவான்.. இப்படி ரௌடிப்பயலுங்க ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகட்டும். ரௌடிங்க கூட்டம் இப்படியாவது குறையட்டும்.


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 19, 2025 09:20

மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 200 க்கு மேல் வெல்லும் என இறுமாப்புடன் சொல்ஒம்


Raj
ஜன 19, 2025 07:02

என்ன சொல்லுவது ஒன்றும் இல்லை கேவலமான ஆட்சி தான். இப்படி கொலை, கொள்ளை, பாலியல் தமிழகமாக மாறிவிட்டது. அடக்க திராணி இல்லாத காவல்துறை அதற்கு ஒரு அமைச்சர். கேவலம்.


raja
ஜன 19, 2025 06:59

சட்டம் டா.. ஒளுங்குடா... திருட்டு திராவிடம் டா.. மாடல் டா... அரசுடா.. தமிழகம் டா.. நம்பர் ஒன்னுடா... காறி துப்புடா...


naranam
ஜன 19, 2025 05:23

இந்த ரவுடிகள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டும் சுட்டுக்கொன்ற சாவது நாட்டுக்கு நல்லது தான். காவல்துறையும் என்கவுன்டர் செய்வதை நிறுத்தக்கூடாது. இந்தக் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது மக்களுக்குத் தமிழக அரசு தரவேண்டும். விரைவில் மற்ற குற்றவாளிகளும் ரவுடிகளையும் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Karthikeyan Palanisamy
ஜன 18, 2025 23:55

இது முழுக்க முழுக்க கற்பனையான தகவல்- திராவிட ஊடகங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 18, 2025 22:55

நாளை காலை அமைச்சர் இராகு பாதி அறிக்கையில், " கொலைகாரர்களை காவல் துறையினர் ஓடி ஓடி தேடி வருகின்றனர். கொலை நடந்த உடனேயே தேட ஆரம்பித்துவிட்டனர் இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்?" என்ற வரிகள் இருக்கும்


Kasimani Baskaran
ஜன 18, 2025 22:16

"சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின்" - பெயரே அதி பயங்கரமாக இருக்கிறதே..


Anbuselvan
ஜன 18, 2025 22:15

வாழ்க வளமுடன் தமிழகர் அரசு. இதுதான் திராவிட மாடலா என கேள்வி கேட்கும் அளவுக்கு போய் விட கூடாது.


Barakat Ali
ஜன 18, 2025 22:08

சார் .... சார் .... இரும்புக்கையை எங்கே வெச்சுட்டீங்க சார் ? ஒருவேளை துருப்பிடிச்சு போச்சா சார் ?


பெரிய ராசு
ஜன 18, 2025 22:35

சார்ஜ் போட்டுருக்கு


Ganesh
ஜன 19, 2025 03:09

FC க்கு போயிருக்கு... சரி இல்லைனா 2026 ல Scrap க்கு போய்டும்... கவலைப்படாதீங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை