உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் இரட்டைக் கொலை; மாமனார், மாமியாரை கொன்ற கொடூர மருமகன்!

நெல்லையில் இரட்டைக் கொலை; மாமனார், மாமியாரை கொன்ற கொடூர மருமகன்!

திருநெல்வேலி: நெல்லை அருகே அரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த, தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாமனார், மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சார்ந்தவர் பாஸ்கர்(55) மற்றும் அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார். ஜெனிபர் அதே தெருவை சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் செல்வகுமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தனியாகப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வட நாட்டைச் சேர்ந்த வேறு ஒருவரை காதலித்து, அவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரியக்குமார் அவரது மாமனார் பாஸ்கர் மற்றும் மனைவி செல்வராணியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.தம்பதியை வெட்டிக் கொலை செய்ததாக மருமகன் மரியக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக மாமனார் பாஸ்கர், மாமியார் செல்வராணியை மருமகன் மரியகுமார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 20, 2025 11:43

சென்னை ஆவடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு இரட்டைக்கொலை. நெல்லையில் மீண்டும் ஒரு இரட்டைக்கொலை. ஒரு கொலை செய்து அலுத்துவிட்டது மக்களுக்கு. மேலும் ஒரு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். இரண்டு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். நாளை, ஜாமீன்தான் சுலபமாக கிடைக்கிறதே என்று மூன்று அல்லது அதற்கு மேலும் கொலை செய்வார்கள் கொலைபாதகர்கள். தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, காவல்துறை திமுகவின் கையில். நீதித்துறைக்கு ஆதாரம் வேண்டும் - கொலையாளிகளை தண்டிக்க. வெட்கம். வேதனை. ஆத்திரம்.


Radhakrishnan, Triplicane
ஜன 20, 2025 22:04

Ramesh, in this issue do you think it's law and order problem or family problem, inside a house an issue between father in law and son in law. How will police know a family problem without anyone complaining to them. This issue happened within the house. Touch your heart and say whether this murder is because of govt or police.


Ramesh Sargam
ஜன 20, 2025 11:42

சென்னை ஆவடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு இரட்டைக்கொலை. அந்த பயம் போவதற்குள் நெல்லையில் மீண்டும் ஒரு இரட்டைக்கொலை. ஒரு கொலை செய்து அலுத்துவிட்டது மக்களுக்கு. மேலும் ஒரு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். இரண்டு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். நாளை, ஜாமீன்தான் சுலபமாக கிடைக்கிறதே என்று மூன்று அல்லது அதற்க்கு மேலும் கொலை செய்வார்கள் கொலைபாதகர்கள். தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, காவல்துறை திமுகவின் கையில். நீதித்துறைக்கு ஆதாரம் வேண்டும் - கொலையாளிகளை தண்டிக்க. வெட்கம். வேதனை. ஆத்திரம்.


raja
ஜன 20, 2025 10:52

சம்பந்த பட்டவர்கள் ஜார்ஜ் பொன்னையா கூற்று படி திருட்டு மாடல் ஆட்சிக்கு பிச்சை போட்டவர்கள்.... மேலும் அண்ணன் சுநா பானா வினாவின் கூற்றுப்படி திராவிட கோட்பாடான திருமண பந்தம் தாண்டிய உறவில் திளைத்தவர்கள் ... அப்புறம் கொலையில் தான் முடியும்...


MUTHU
ஜன 20, 2025 09:46

தரித்திரம் தள்ளி போயிடுச்சு நல்லதுன்னு போய்க்கிட்டே இருப்பானா. இதுக்கு போய் வாழ்க்கையையே தொலைச்சிக்கிட்டு.


baala
ஜன 20, 2025 09:35

செல்வகுமார் யாரு


raja
ஜன 20, 2025 10:54

விடியலுக்கு பிச்சை பொட்டவரா இருப்பாரோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை