உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூரில் சிறுவர்கள் இரட்டைக்கொலை.. நண்பனின் குழந்தைகளை கொன்ற நபர் கைது; பின்னணியில் பகீர்

வேலூரில் சிறுவர்கள் இரட்டைக்கொலை.. நண்பனின் குழந்தைகளை கொன்ற நபர் கைது; பின்னணியில் பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குடியாத்தம்: வேலூரில் நண்பனின் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் அருகே உள்ள ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த குமார். கட்டட ஒப்பந்ததாரரான இவர், தனது நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு நண்பன் யோகராஜின் குழந்தைகளான யோகித் (5), தர்ஷன் (4) ஆகியோரை வசந்தகுமார் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து கூப்பிட்டுச் சென்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=an4p6pac&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீண்ட நேரமாகியும் கடைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர், வசந்தகுமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து தேடிச் சென்றுள்ளனர்.அப்போது, அங்குள்ள கோவில் அருகே குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வசந்தகுமாரை தேடிப்பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், யோகராஜ் வாங்கிய ரூ.14,000 பணத்தை திருப்பிக் கொடுக்காததால், ஆத்திரத்தில் அவரது குழந்தைகளை வசந்தகுமார் கொலை செய்யததாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், கோயில் அருகே குழந்தைகளின் சடலம் கிடந்ததால், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Natchimuthu Chithiraisamy
செப் 26, 2024 10:56

நீதி துறை ரூபாய் 14000 குறைவான தொகை எனவே தண்டனை மிக குறைவாக கொடுக்கலாம் என பல வழக்கறிஞர்கள் கூறலாம்.


அப்பாவி
செப் 20, 2024 17:08

முதலில் அவனை போட்டுத்தள்ளிட்டு அப்புறமேட்டி உங்க விசாரணையை துவக்குங்க...


venugopal s
செப் 20, 2024 16:09

இங்கு நிறையப் பேருக்கு மூளை மழுங்கிப் போய் விட்டது போல் உள்ளது. தமிழகத்தில் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு மாநில அரசையும், ஒட்டுமொத்த மக்களையும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டும் அளவுக்கு மழுங்கி விட்டது.குருட்டு பக்தர்கள் என்று சரியாகத்தான் பெயர் வைத்து உள்ளனர்.


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 14:04

தமிழகம் முன்னேறிய மாநிலம் .... பீகார், ஒடிஸ்ஸா போன்றவை பின்தங்கிய மாநிலங்கள் .... அவற்றுடன் ஒப்பிட்டு ஒரு உ பி கருத்து போடுகிறது .... திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் திருட்டு ... தமிழக இளைஞர் கைது .... பீஹார் இன்ஜினியரிடம் செல்போன் திருட்டு , சென்னை மாணவர் கைது ...... இப்படியெல்லாம் செய்திகள் வந்ததை இந்த உ பி படிக்கலை போலிருக்கு ......


ram
செப் 20, 2024 13:34

என்ன இப்ப சுடாலின் மகன் வந்தால் இதுபோல தினமும் நடக்கும், தமிழ் மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று இங்கு இருக்கும் சில நியூஸ் channels திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்ப வைக்கும்.


Ramesh Sargam
செப் 20, 2024 12:34

தமிழகம் ஒரு அமைதி பூங்கா என்று தினம்தினம் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் முதல்வர் ஸ்டாலின் எங்கே?


வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 11:19

பீகாரில் தினம் தினம் இப்படி நடக்குதா?? அடடா, அந்த ஊர் நிருபர்கள் மற்றும் போலீசுக்கே இது தெரியல. உங்களுக்கு தெரியுது பாரேன். சூப்பர்.


Kumar Kumzi
செப் 20, 2024 11:50

ஓசிகோட்டர் கூமுட்ட இங்க விடியாத விடியலின் திராவிஷ கொடூர ஆட்சியில் நடந்த கொலைக்கு பீஹாருக்கு போற...


TRUE INDIAN
செப் 20, 2024 12:52

கூமுட்டை கருத்துக்கள், கள்ளச்சாராய கோஷ்டி.


N.Purushothaman
செப் 20, 2024 14:14

காலையிலேயே காபியும் கஞ்சாவும் போல ......விளங்கிடும் ...


Duruvesan
செப் 20, 2024 10:30

அடிமைகளே இதுக்கெல்லாம் மூலம் கஞ்சா, தாஸ்மாக், போதை வஸ்து. பிஞ்சுகள் வலில துடிச்சி இருக்கும், மனசு வலிக்குது. விடியல் போல் கேடு கெட்ட ஆட்சி தேவையா? இப்போது இது தினம் நடக்கிறது


R SRINIVASAN
செப் 20, 2024 09:22

பிஹாரில் ஐஐடி மாணவன் கூகிளில் வருடம் Rs.2 கோடி சம்பளத்தில் சேர்ந்திருக்கிறான் தமிழ்நாட்டிலோ மாணவர்கள் கஞ்சா அடித்து போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கிறான் .நிதிஷ் குமாரின் அரசு நல்லரசு என்பதிற்கு இதைவிட நற்சாட்சி பத்திரம் வேண்டுமா.


வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 10:35

என்ன அறிவற்ற தனமா


வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 11:17

ஒடிசா போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ வீரரின் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.// தினமலர். அண்ணே, ஒடிசா முதல்வர் ஆட்சி எப்படி?


Kumar Kumzi
செப் 20, 2024 11:53

வைகுண்டுன்னு புச்சா ஒரு மூர்க்க காட்டேரி கெளம்பிருக்கா


Mettai* Tamil
செப் 20, 2024 12:55

வைகுண்டுக்கு தூரப்பார்வையோ ,முதலில் தமிழ் நாட்டில் நடக்கும் ஊழல் கொலை கொள்ளை போதை போன்றவற்றை பற்றி பேசு


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 14:20

வைகுண்டு சாரின் பழைய ஐடி "புகழ்" ...... எந்தப் பேரு நல்லா இருக்கு ??


N.Purushothaman
செப் 20, 2024 09:16

ஒழுக்கமற்ற கட்டுப்பாடற்ற ,நிதானம் இல்லாத தலைமுறை எதிர்கால சமுதாயத்திற்கு பேராபத்து ....பிஞ்சுகளை கொல்லும் அளவிற்கு இன்று தமிழகம் சென்ற் கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை