உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் கண் மருத்துவமனை ஒன்றிணைப்பு

டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் கண் மருத்துவமனை ஒன்றிணைப்பு

சென்னை: “டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது,” என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதில் அகர்வால் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் கீழ், டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வந்தன. இந்த இரண்டு நிறுவனங்களும், பங்கு சந்தையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் நடந்த, இந்நிறுவன இயக்குநர்களுடனான கூட்டத்தில், இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.32 லட்சம் சம பங்குகளை வெளியிட, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆதில் அகர்வால் கூறியதாவது: இந்த நிறுவனங்கள் இணைப்பு, எங்களது குழுமத்தின் முக்கிய நடவடிக்கையாகும். இவை, வணிகம், தொழில் செயல்பாடுகளின் முழுமையான திறனை வெளிக்கொணர உதவும். நீண்டகால அடிப்படையில், பங்குதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பு உருவாக்கி தரப்படும். இந்த இணைப்பின் வாயிலாக, பங்கு பரிமாற்ற விகிதம், நியாயமானதாகவும், சமநிலையானதாகவும், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி