உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் டாக்டர் சுப்பையா; சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த இவ்வழக்கில் ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.பின், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில், மும்பை வழக்கறிஞர் சவுத்ரி வாதாடினார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று( ஜூன் 14) அளித்த தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும், ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். 9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை எனில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

murali
ஜூன் 17, 2024 15:48

அப்போ யார் சார் கொலை செய்தது. தமிழ் நாடு போலீஸ் திறமை அற்றதா, உயர் நீதி மன்றத்தில் நீதி சரியில்லையா. ஒண்ணுமே புரியல உலகத்திலே.


Sainathan Veeraraghavan
ஜூன் 16, 2024 15:43

இந்த லக்ஷணத்தில் தமிழ்நாடு காவல் துறை உலகிலேயே திறமை வாய்ந்தது என்று பெருமை வேறு.


Murugan
ஜூன் 16, 2024 11:50

அப்போ யார் கொலை செய்தது


Murugan
ஜூன் 16, 2024 11:43

அருமை சார்.


Rvn
ஜூன் 15, 2024 09:59

யாரும் அவரை கொள்ளவில்லை என்கிறார்களா ?


K.Muthuraj
ஜூன் 15, 2024 09:49

உடுமலை சங்கர் கொலை வழக்கும் இந்த வழக்கு போல் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் சாட்சி சொன்னவர் கௌசல்யா விடாப்பிடியாக நின்று சாட்சி சொன்னது தான்.


Selvaraj
ஜூன் 15, 2024 08:42

சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். போலீஸ் அதிகாரிகள் கஷ்டப்பட்டு சான்றாவணங்களை சேகரித்து கொடுப்பதெல்லாம் வேஸ்ட் போல. சட்டத்தில் அல்ல குறை அதை கையாளுவதில் தான்..


rama adhavan
ஜூன் 15, 2024 02:33

சரியான ஆட்களை பிடிக்காத போலீஸ் ஆட்களை பிடித்து ஆயுள் தண்டனை தர வேண்டும்.


Rpalnivelu
ஜூன் 14, 2024 21:37

பாஜக அரசு நீதித் துறையை சீரமைக்க வேண்டும். இது அவசரமும் அவசியமும் கூட. நீதிபதிகள் தங்களை தாங்களே நியமித்துக் கொள்வது ஊழலுக்கும் திறமையின்மைக்கும் வழி வகுக்கிறது


Jayaraman Sekar
ஜூன் 14, 2024 21:28

டாக்டர் சுப்பையா கொலை யாகவே இல்லை... தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு இறந்து போனார்.... அதனால் இது தற்கொலையே....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ