உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ராமநாதபுரம்: தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் தேவர் என கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலைகள் அமைத்து, குரு பூஜை நடத்தியிருக்கிறோம். மதுரையில் தேவர் சிலை, கல்லூரிகளை தி.மு.க., அரசு தான் அமைத்தது. தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2qgj9xe0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரி குண்டாறு திட்டப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்; நில எடுப்பு பணிகள் 40% நிறைவு பெற்றது. விரைவாக முடிப்போம். மீனவர்கள் பிரச்னை குறித்து தொடர்ந்து கடிதம் எழுதி கொண்டு இருக்கிறோம். டில்லி செல்லும் போதெல்லாம் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் மீனவர்கள் பிரச்னை குறித்துப் பேசியுள்ளோம். இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் மரியாதை

முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர், தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இ.பி.எஸ்., மரியாதை

பசும்பொன்னில் தேவர் சிலைக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர். எம்.ஜி.ஆர்., காலத்தில் தான் தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டது. வீரம், விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் தேவர். இவருக்கு 13.5 கிலோ தங்க கவசத்தை வழங்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

தாமரை மலர்கிறது
அக் 31, 2024 00:38

இறந்துபோன தலைவர்களை சாதி முகங்களாக மாற்றியது தான் திராவிட சாதனை.


Suppan
அக் 30, 2024 21:29

அது சரி. ராம் சாமிதான் சாதியை ஒழிச்சுட்டாருன்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறீங்க. கிருஷ்ணமாச்சாரி சாலையை கிருஷ்ணமா என்று அபத்தமாக மாத்தினீங்க. ஆனா தேவர்னு சொல்றீங்களே அது சாதி இல்லீங்களா இல்ல முத்துராமலிங்கம் என்று சொன்னா ஒட்டு கிடைக்காதுன்னு பயமா? வழக்கம் போல ஓட்டுக்காக ஊரை ஏமாத்தற வேலைதானா


balasantham
அக் 30, 2024 18:49

All this Dravida's Either DMK or ADMK those who follows Soriyan no calibur to come and pay homage or respects Devar perumanar who always treated Desiyam


D.Ambujavalli
அக் 30, 2024 18:40

‘ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் ‘ 2026 நெருங்குகிறது இந்த விஜய் வேறு இப்படி மாநாடு நடத்தி புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டார் இனி ஆடி , தை , வெள்ளி, முளைப்பாரி எல்லாவற்றுக்கும் வாழ்த்து சொல்வார்கள் நிறைய நடக்கும் ஹிந்துக்கள் விழாக்கள், ஒட்டென்றால் சும்மாவா ?


Ganesun Iyer
அக் 30, 2024 18:23

ஸ்டாலின் சொன்னது சரிதான்.. 10 ₹ பாலாஜிய ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து மாலை மரியாதை செய்து மீண்டும் அமைச்சராக்கியதே அதற்கு சாட்சி..


என்றும் இந்தியன்
அக் 30, 2024 17:32

சொரியான் வழியில் செல்லும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசு செய்வது என்ன. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று???கல்லில் செய்த கடவுளுக்கு என்ன சக்தி இருக்கின்றது ??அதற்கு கற்பூர பூஜை, பிரசாதம் அனாவசியம்??? திருட்டு திராவிட மடியல் அரசு செய்வது என்ன??? செத்த அழுகிப்போகும் பிணத்திற்கு ஒரு மேடை கட்டி அதில் கற்பூரம் காட்டுவது என்ன???வடை ......பிரசாதம் முழங்குவது என்ன???முக்கிய பைல்களை அதன் மீது வைத்து அந்த சம்பவம் நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டுவது என்ன??? தியாகிகள் சிலைக்கு வணக்கம் சொல்வது என்ன???? ஆகவே திருட்டு திராவிட மாடல் என்றால் இது தான்???சொல்வது ஒன்று செய்வது முற்றிலும் மாறுபட்ட ஒன்று???


angbu ganesh
அக் 30, 2024 17:17

தேவர் ஒரு தீவிர ஆன்மிக வாதி நல்லவர் அண்ணாவையே வெரைட்டி அடிச்சவர், அவருக்கு இந்த சிம் மரியாதை தராது எல்லாம் ஓட்டுக்காக மட்டுமே எல்லாருக்குமே தெரியும் வச்ச குங்குமத்தை அழிச்சவர் அச்செய்


ஆரூர் ரங்
அக் 30, 2024 15:11

தெய்வீகத்துக்கு எதிரி. தேசியமோ வேப்பங்காய். இதெல்லாம் உமக்குத் தேவையா? சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார்.


M S RAGHUNATHAN
அக் 30, 2024 15:01

ஏண்டா கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம பேசுறீங்க. அண்ணாதுரையையும், ராமசாமி நாயக்கனையும் அடித்து துரத்தியவர் தேவர் அவர்கள். இந்த இருவருக்கும் தேவர் என்றால் சிம்ம சொப்பனம். ,


ஆரூர் ரங்
அக் 30, 2024 14:09

அண்ணா பற்றி ஸ்ரீ முத்துராமலிங்க ஐயா கண்டித்துக் கூறியவற்றை இங்கு எழுதினால் வெளிவராது. ஆனா அந்த உண்மை கசக்கும். ஆனாலும் வெட்கம் மானம் இல்லாமல் வாக்கு வங்கிக்காக போலி மரியாதை நாடகமாடுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை